கருணைக் கொலைக்கு மிஷனரிகள் உரிமம் பெற்றவையா?

உரத்த சிந்தனை துணுக்குகள்

கடந்த பிப்.22 காஞ்சிபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று கிராம மக்களால் மடக்கபட்டு அதில் ஒரு பிணம், இரண்டு முதியவர்கள் மற்றும் கருணை இல்லத்திற்கு தேவையான இலைகட்டு, காய்கறி ஆகியவை காணப்பட்டன. இதையடுத்து போலீஸ் சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் அந்த இல்லத்தை நடத்தி வந்த பாதிரியார் தோமஸ் மீது பதிவான வழக்குகளை எதிர்த்து சென்னையில் பல கிருத்துவ அமைப்புகள் மார்ச் 5 ஆம் தேதி சேப்பாக்கதில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் செயின்ட் ஜோசப் கருணை இல்ல அவலங்களில் விடை தெரியாத பல கேள்விகள்!

1. இலைக்கட்டு, காய்கறிகளுக்கு இடையில் பிணத்தை ஏற்றியது ஏன்?

2. அனாதை இல்லம் நடத்த அனுமதி இல்லாது போது, 9 குழந்தைகள் ஏன் அங்கு தங்க வைக்கப்படிருந்தனர்? இவர்கள் கட்டாயப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தனரா அல்லது பெற்றோர் அனுமதியுடன் இருந்தனரா?

3. எந்த மதம் சார்ந்தவர் என்றாலும் ஒருவர் இறந்தால் உரிய இறுதி காரியங்கள் நடக்க வேண்டும், அவ்வாறு நடத்தாமல் இவ்வளவு பிணங்களை பாடப்படுத்தியது ஏன்? சிமெண்ட் அடுக்கில் விநோத கல்லறைகள் கட்டப்பட்டது ஏன்?

4. இவ்வளவு குற்றச்சாட்டுக்களுக்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?

5. இந்த போராட்டத்தை அரசு அனுமதிக்கலாமா? அது விசாரணையை பாதிக்காதா?

சிந்திப்பீர் பதிலளிப்பீர்.

தமிழ்நாடு இளம் சிந்தனையாளர்கள் மன்றம்

– இப்படி ஒரு சிந்தனையை வலைத்தளங்களில் எழுப்பியிருக்கிறார்கள் தமிழ்நாடு இளம் சிந்தனையாளர்கள் மன்றம் என்ற அமைப்பினர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட கருத்துக் கோவையில் தவறு செய்த ஒரு பாதிரிக்காக ஒட்டு மொத்த பாதிரிகளும் ஆதரவு தெரிவித்துக் கொண்டு வருவது, அவர்களிடையேயும் சந்தேகத்தைத் தூண்டுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.