தரங்கம்பாடி: கடற்கரையில் கொண்டாட்டம்

Published:

‘பங்களா ஆன் த பீச்’

சரித்திரப் புகழ்பெற்ற தரங்கம்பாடி, ஹனிமூனுக்கும் பெயர் பெற்றது. கி.பி.1680 முதல் 1845 வரை டேனீஷ் கிழக்கிந்தியா கம்பெனியின் தலைமையிடமாக திகழ்ந்த இடம், வரலாற்று சிறப்பு மிக்கது. டேனீஷ் கோட்டை சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். அதன் அருகிலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் இரண்டு தேவாலயங்கள், ஒரு ரெஸ்ட்டாரண்ட், ஒரு கைவினைப் பொருட்கள் விற்கும் இடம் ஆகியவை உள்ளன.

 
1.bp.blogspot.com 0aDfsO0dGIc ViZQDRGh4 I AAAAAAAAGJE sZKARMBbT7o s640 the bungalow on the beach - 2026
 
இங்கு இருந்த டேனிஷ் அரசின் கலெக்டர் பங்களா தற்போது ‘பங்களா ஆன் த பீச்’ என்ற பெயரில் ஹோட்டல்களாக இயங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் கட்டடக்கலை அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இந்த ஹோட்டலில் தங்கி எதிரே மின்னும் கடல் அலைகளைப் பார்ப்பது தனி சுகம். அதிலும் மனதுக்குப் பிடித்த துணையோடு கை கோர்த்தபடி பார்ப்பது பரவசமான அனுபவம்.  
 
2.bp.blogspot.com oCTmZ KcdYc ViZQS4eKRsI AAAAAAAAGJM EpKSe8Hmdl0 s640 beach bungalow view out in the maldives 303073 - 2026
 
மாலை நேரத்தில் இந்தக் கடற்கரையில் உள்ளூர் மக்கள் வந்து செல்வது மனதைக் கவரும் அம்சம். அதிலும் வண்ண வண்ண சேலைகளில் அந்தப் பெண்கள் குழந்தைகளுடன் வருவதும் பார்க்க ஆனந்தம் தரும். இவற்றையெல்லாம் பார்த்தப்படி சமையல் செய்யலாம். இல்லையென்றால் துணையோடு ரசிக்கலாம். ஹனிமூன் ஜோடிக்கு ஏற்ற இடம் இது.
 
எப்படி போவது?
சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் பாண்டிச்சேரியில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் தரங்கம்பாடி உள்ளது.
 
எங்கு தங்குவது?
நீம்ரானா ஹோட்டல் குழுமம் இங்குள்ள ‘பங்களா ஆன் த பீச்’ ஹோட்டலை நடத்தி வருகிறது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.4,450.
 
4.bp.blogspot.com ckPJD9wEBXU ViZQhv1cMBI AAAAAAAAGJU KbiHy06mIRI s640 Tranquebar Michel Figuet 1875 - 2026

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img