பிரிட்டன் எம்பி.,க்களிடம் கோட் சூட்டுடன் தமிழில் கலந்துரையாடிய எடப்பாடியார்!

Published:

IMG 20190829 161659 - 2026

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரிட்டன் எம்.பி.க்களிடம் இன்று கலந்துரையாடினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார்.

முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அரசுத் துறைச் செயலாளர்கள் சென்றனர்.

அவர், ஆக.30 இன்று பிரிட்டன் எம்.பி.களை சந்தித்துப் பேசினார். வேட்டி சட்டை விடுத்து பந்தா வாக கோட் சூட் அணிந்து அசத்தலாக தமிழில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அவர் லண்டனில் எம்.பி.,க்களுடன் சுகாதார திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

images 10 - 2026

நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி துறைகளில் அதிகளவு முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். பின்னர் லண்டனில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவனையை நேரில் பார்வையிட்டு, ஆம்புலன்ஸ் சேவையை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடியார், மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம் உள்ளதாகவும் லண்டன் எம்.பி.,களிடம் பெருமிதமாகக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

அவரது பேச்சு…

Related articles

Recent articles

spot_img