ஒலிம்பிக்: பளுதூக்கி பதக்கம் சுமந்தவர்! மீராபாய் சானுவுக்கு குவியும் பாராட்டு!

உலகம் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
saigome - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் சாய்கோம் மீராபாய் சானு 49 கிலோகிராம் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோவும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிளொவும் தூக்கி அவர் இந்தச் சாதனையைச் ஸ்ய்தார். முதலிடம் சீனாவின் ஹோ-சி-ஹுஇக்குவுக்குக் கிடைத்தது.

முதல் பதக்கம் பளுதூக்கும் போட்டியில் இந்தியப் பெண் வீராங்கனைக்கு

வில்வித்தை கலப்பு இரட்டையர் பொட்டியில் தீபிகா குமாரி மற்றும் ப்ரவீண் ஜாதவ் இணை காலிறுதிப்போட்டியில் கொரிய அணியிடம் தோவியடைந்தனர்.

பாட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சாய் ப்ரணீத் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் ஆட்டத்தில் சுமித் நாகல் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் ‘இஸ்தோமின்’-ந்னை 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றிற்கு முனேறினார்.

mirabai chanu - 2026

10 மீட்டர் ஏர் ரைஃபில் போட்டியில் சௌரப் சௌத்ரி அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். தகுதிச்சுற்றில் 17ஆவதாக வந்து அபிஷேக் வர்மா பொட்டியில் இருந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் ‘பாத்ரா மணிகா’ 4-0 என்ற செட் கணக்கில் பிரிட்டன் விராங்கனையைத் தோற்கடித்தார்.

இந்திய ஆண்கள் இரட்டையர் பாட்மிண்டன் வீரர்கள் ‘சாத்விக்சைராஜ் ரங்கிரெட்டி’, ‘சிராக் ஷெட்டி’ சீனாவின் உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள யாங்- லீ, சின்-லிங்-வாங் ஜோடியை 21-16, 16-21, 27-25 என்ற புள்ளிக் கணக்கில் வென்று ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒற்றையர் பாட்மிண்டன் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 13 இடத்தில் உள்ள ‘சாய் ப்ரணீத்’, உலகத் தரவரிசையில் 47ஆவது இடத்தில் உள்ள இஸ்ரேல் வீரர் ‘மிஸ்ரா சில்பர்மேன்’-இடம் தோற்றுப்போனார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.