பாண்டே யுடனான அமீரின், நேருக்கு நேரில்,… அமீருக்குள்ளிருந்த ஒரு பூனை, வெளியே குதித்தது.!
அமீரின் பயம்,… ரஜினியின்,..
— ஹிந்துத்துவா வை விட
— ரஜினியின் வயதை விட
— ஆன்மீக அரசியலை விட
— ரஜினி மறத்தமிழனில்லை, என்பதை விட
— ஒரு நடிகன் நாடாள்வதா எனும் வாதத்தை விட
அவரை பாஜக பின்னாலிருந்து இயக்குகிறது, என்று தீவிரமாக நம்புவதன் அடிப்படையிலானது.! பேட்டியில், அவரே சொன்னது, இது!!
ரஜினி, இங்குள்ள இரண்டு கழகங்களில் ஏதாவது ஒன்றுடன் சார்ந்திருந்தது அரசியல் செய்தாலும் கூட, அமீர் (போன்ற “தமிழ் தேசிய பிரிவினைவாதிகள்”) கவலைப்பட்டிருக்க மாட்டார்! காரணம்,… இருக்கிறது!.
சரி,.. பாஜக வும் அகில இந்திய அரசியல் கட்சிதானே? 19 மாநிலத்தில் ஆள்பவர்கள்தானே? இந்தியாவில் மிக அதிக மக்களின் தேர்வு தானே?
இங்கும் அவர்கள் ஆண்டால், அரசியல் ரீதியாக என்ன குறைந்துவிடும்? தேர்தல் களம்தானே ஜனநாயக போர்க்களம்?
அது எல்லாம்,.. ஒன்றுபட்ட இந்திய ஜனநாயக இறையாண்மையில் நம்பிக்கை கொண்டோருக்கு!
“தமிழ் தேசியம்” எனும் போர்வையில் திரியும், தமிழீழ புலி அனுதாபிகள், ஆதரவாளர்கள், புலிகள்,.. இவர்களுக்கு அல்ல!
அமீரை நெருக்கி நெருக்கி, பாண்டே கேள்வி கேட்டதில், வேறுவழியில்லாமல் உள்ளிருந்த மோசடித்திட்டத்தை உளறினார் ஒரு கட்டத்தில்!
“அவரு,.. ஒரு வழிகாட்டியா (பின்புலத்தில்) இருக்கிறதுல எங்களுக்கு பிரச்சினை இல்லை!”
“ஒரு கிங்-மேக்கரா அவரு இருக்கிறதுல எங்களுக்கு பிரச்சினை இல்லை!”
“அவரே பதவியில் அமர்ந்தா,.. அவரு குடும்பத்துக்கு பதவி கை-மாற்றப்படும் ன்னு அச்சப்படுகிறேன்!”
என்றார்!
அதுவரை கூட,… பூனை தலையை மட்டும் தூக்கியிருந்தது!
— 68 வயசுல, ஏமி ஜாக்சனோட டான்ஸ் ஆடறவருக்கெல்லாம்… (நக்கல்),..
— அவருக்கு உடல் நலம் சரியில்லை,.. மாற்று சிறுநீரகம் வச்சவர்,.. (அக்கறை போல!)
— அவரால முடியாது,.. வெறுமென அடையாளம் காட்டுங்க,.. எதுக்கு பதவிக்கு வரீங்க,.. (அக்கறை போல!)
— ராம கிருஷ்ணா மடத்துக்கு போனாரு,. (ஹிந்து விரோதம்)
— சர்ச்சுக்கு, தர்காவுக்கு போகலை,.. (மத சார்பு இல்லை!)
— ரஜினி மூலம் தாமரை மலரும் ன்னு சுத்தி இருக்கிற மத்தவங்க சொல்றதை அவர் மறுக்கவில்லை,… (குற்றச்சாட்டு)
இப்படி மெல்ல வாலை ஆட்டிய பூனை,..
“அவருக்கு விருப்பமில்லை, மத்திய அரசு,.. ரஜினியோட “கடைசி காலத்தை” (அமீரின் வார்த்தைகள்!) பயன்படுத்தி, ரஜினியின் மூலம், அவரோட மக்கள் செல்வாக்கை கொண்டு, ஒரு ஆட்சி அமைக்க வைத்து, ரஜினிக்கு பின், தங்கள் வசப்படுத்திக்கொள்ள திட்டம் போடுது,.. ன்னு நான் நேரடியாவே சொல்றேங்க!” – அமீர்!
ரஜினியின் குடும்பத்துக்கு பதவி போயிடும்ன்னு ஆரம்பிச்ச அமீர்-பூனை,.. வாலை ஆட்டி ஆட்டி,… இப்போ, மத்திய அரசுக்கு அதாவது பாஜகவுக்கு போயிடும் ங்கிற நிலைப்பாட்டுக்கு வந்து,..
கழுத்தை மட்டும் நீட்டி கண்ணடித்தது!
“நான் ஒண்ணும் ரஜினி அரசியலுக்கு வர வேணாம்ன்னு சொல்லலை.! இந்த 68 வயசுல உங்களுக்கு எதுக்கு நேரடி அரசியல்? வெறுமென அடையாளம் காட்டிட்டு பின்னாடி இருந்து வழி நடத்துங்க ங்கிறேன்!”
“அவரு இந்த கட்சியை ஆரம்பித்து, யார் கையில குடுக்கப் போறீங்க ன்னு சொல்லுங்க ன்னு கேட்கிறேன்!”
“இதென்ன சார்,… ரஜினி ஆட்சியை புடிச்சு உங்க கிட்ட குடுக்கணுமா? என்ன சார் இது? – பாண்டே!
“அவர் அமீர் கிட்ட குடுக்க வேணாம். சீமான், திருமுருகன், எபினேசர் கையில குடுங்க ன்னு சொல்லலை! அது யாரா வேணா இருக்கட்டும்! (பூனை சிரிக்குது!) யார் நல்லவுங்க ன்னு நீங்க நினைக்கிறீர்களோ,.. யார் சிந்தனையாளர்கள் ன்னு நினைக்கிறீர்களோ,.. யார் இந்த மண்ணுக்கு உண்மையா உழைப்பாங்கன்னு நம்புறீங்களோ,… அவங்க கிட்ட குடுங்க ன்னு சொல்றேன்!” – அமீர்!
“மக்கள் யாரு கிட்ட ஆட்சியை தரணும்னு நினைக்கிறார்களோ, அவங்களுக்கு தரப்போறாங்க! ரஜினி ஆட்சியை புடிச்சு இவுங்க கையில தரணுமா? என்னங்க இது?” – பாண்டே!
“ஆனா, மக்கள் மத்தவுங்க மேல வச்சதை விட அதிக அன்பு ரஜினி மேல வச்சிருக்காங்களே? அதுதான் சிக்கல்! (அதுனால மத்தவங்களால ஆட்சியை புடிக்க முடியாதே?)” – அமீர்!
இந்த நிலையில்,… அந்த பூனை, வெளியில் குதித்தது! வாய் விட்டு சிரித்தது!
“அவரு கிட்ட திரும்ப திரும்ப கேக்கிறேன்! ”
“இது,.. என்னோட மண்ணு சார்! என்னோட மக்கள், பசியில கஷ்டத்துல இருக்கான் சார்! … திரைப்படங்கள்ல அவரே காட்டறா மாதிரி, கதாநாயகன் கடைசியில வந்து பாதிக்கப்பட்ட மக்களோட உரிமைகளை மீட்டுத் தரா மாதிரி, எங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றுத்தரும் வாய்ப்பை, கடவுள் உங்களுக்கு தந்திருக்கான்! அதை நீங்க செய்ய நீங்க ஏன் மறுக்கறீங்கன்னு தான் கேட்கிறேன்!” – அமீர்!
இப்பவும் புரியாதவுங்க,.. போகோ சானல் பார்க்க போகலாம்! டாட்டா!
தமிழ்தேசியம் என்பது, தீவிரவாதி பிரபாகரனின் ஈழத்தின் மறுவடிவம்!
இலங்கையில் பிரிக்க முயன்று தோல்வியுற்ற பிரிவினைவாதிகளின், புத்துயிரூட்டப்பட்ட, புதுமுயற்சிதான், தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்தெடுத்து,..
தனித் தமிழகம் (தமிழீழம்?), அமைக்க முயலும் தேசப் பிரிவினைவாத இயக்கம் – தமிழ்தேசியம்!
ஆயுதப்போரில் வேறுநாட்டில் முடியாததை, தமிழகத்தில் ஊடுருவி,
இந்தியாவில் நிறைவேற்றிக் கொள்ள தீவிரத்திட்டம், மெள்ள முன்னெடுத்து செயலாக்கப்படுகிறது!
இதில் அவர்கள் கண்டுள்ள முதல் வெற்றி,..
ஜெயாவையே, தேர்தல் அறிக்கையில் தனி ஈழத்துக்கு ஆதரவாக “கொள்கை” வெளியிடவைத்து,..
இந்திய தேசவிரோதப் பிரச்சாரங்களை கண்டுகொள்ளாமல் இருக்க வைத்தது.
— இன்று சர்வ சாதாரணமாக காண முடியும் தீவிரவாதி பிரபாகரனின் கட்டவுட்டுகள்,
— கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரிவினைவாத மேடைப்பேச்சுக்கள்,
— அற்புதம்மாளுக்கு ஆசீர்வாதம்,..
— நளினிக்கு பரோல், மற்றும் விடுதலைப் பேச்சு!
— மற்ற ராஜீவ் கொலையாளிகளை எப்படியாவது வெளியில் கொண்டு வரும் முயற்சி,..
— கூடங்குளம் எதிர்ப்பு,..
— இளைஞர்களை (முக்கியமாக மாணவர்களை) அவ்வப்பொழுது ஒன்று சேர்த்து போராட வைப்பது,..
இதுபோல்,… பலவும், கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே தமிழகத்தில் காணக் கிடைக்கும் விசித்திரங்கள்!
ஆனால், இதெல்லாமே,.. இலங்கையில், புலிகளின் ஆரம்பகாலத்தில்,
அவர்கள் கையாண்ட மூளைச்சலவை யுக்திகளின் வேறுவடிவ அங்கங்கள் என்பது, எவ்வளவு பேருக்கு புரியும்?
இந்த தமிழ் தேசியக் கூட்டம், தமிழக ஆட்சி, கழகங்களுக்கு போனாலும் கவலைப்பட மாட்டார்கள்! எழுதி வைத்துக்கொள்ளுங்கள்! கழகங்களை கையாள முற்றிலும் தெரியும் அவர்களுக்கு!
சரி,.. வேறென்ன பிரச்சினை, இவ்வளவு மும்முரமாக ரஜினியை எதிர்ப்பதற்கு?
ஒற்றைக்காரணம்: பாஜக!
காரணம், எவ்விதத்திலாவது, பாஜக இங்கு கால் பதித்து விட்டால், தமிழ் தேசியத்தின் தேசவிரோத, பிரிவினைவாத செயல்கள், ஓட்ட நறுக்கப்படும் அபாயம் உள்ளது, என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளனர்!
பாஜக ஐந்தாண்டு தமிழகத்தை ஆண்டால், தேசிய உணர்வு ஆழமாக விதைக்கப்படும் அபாயம் உண்டு, என்பதை தமிழ் தேசிய வாதிகள் நன்கு அறிவர்.
அடுத்த முறை, ஒரு பதட்ட-நடுக்கத்துடன், …
“பாஜக இங்கே காலூன்ற முடியாது,.. இது பெரியார் மண்ணு.,,!
ங்கிற குரல் எங்கே கேட்டாலும்,…
அதன் பின்புலத்தில்,.. இந்திய பிரிவினைவாத தமிழ் தேசியம் உள்ளது,.
என்பது, உறுதி!
ராம்கி ~ ராமகிருஷ்ணன் சிவசங்கரன்



