காப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு! சூர்யா ரசிகர்கள்!

உரத்த சிந்தனை சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
suriya bike. - 2026

நெல்லை: காவல்துறை துணை ஆணையரின் வேண்டுகோளை ஏற்ற நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி சுபஸ்ரீ இறந்த சம்பவத்திற்கு பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனிமேல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

நடிகர் சூர்யா ‘காப்பான்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட போது ‘காப்பான் திரைப்பட வெளியீட்டின் போது யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பள்ளிகளில் கழிவறை கட்டிக் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தார்

அதேபோல் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் என்பவர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். ‘காப்பான்’ திரைப்படத்தின் போது பேனர் வைக்கும் செலவில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்து சூர்யாவின் ரசிகர்கள் உதவி செய்யலாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார்

kappan - 2026

நெல்லை துணை ஆணையரின் இந்த கோரிக்கையை ஏற்று சூர்யாவின் ரசிகர்கள் ‘காப்பான்’ திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 20ஆம் தேதி பேனர் கட்ட செய்யப்படும் பணத்தில் 200 ஹெல்மெட்டுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

சூர்யா ரசிகர்களின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்த நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் சூர்யா ரசிகர்கள் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.