― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்மேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா?

மேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா?

- Advertisement -

உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த மேட்ரிக்ஸ் படங்களின் மூன்று பாகங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், விரைவில் உருவாகப் போகும் மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடிக்க இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் பிரியங்கா.

தளபதி விஜய் நடிப்பில் கோலிவுட்டில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களான பேவாட்ச் மற்றும் எ கிட் லைக் ஜேக் படங்களில் நடித்துள்ளார்.

ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் அதீத ஆர்வம் கொண்டவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கேன்ஸ் விருது விழா, ஆஸ்கர், கோல்டன் குளோப் மற்றும் கிராமி விருது விழா என பல வெளிநாட்டு விருது விழாக்களுக்கு செம்ம செக்ஸியான உடைகளை அணிந்து ஃபேஷன் மங்கையாக பிரியங்கா சென்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கிராமி விருது விழாவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா, லாங் ஓப்பன் டிரெஸ் அணிந்து தனது முன்னழகு முழுவதும் தெரியும் படி சென்று, உலக ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். பிரியங்கா சோப்ராவின் லாங் ஓப்பன் டிரெஸ் பாலிவுட்டில் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.

1999ம் ஆண்டு வெளியான மேட்ரிக்ஸ் படம் உலகளவில் டெக் ரீதியான படங்களில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. இயக்குநர் லானா வச்சோவ்ஸ்கி இயக்கிய மேட்ரிக்ஸ் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் நடித்து அசத்தியிருந்தார். மேலும், மேட்ரிக்ஸ் படங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகி உலகளவில் ரசிகர்களை ஈட்டியுள்ளது.

தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன் என்ற பெயரில் 2003ம் ஆண்டு வெளியான மேட்ரிக்ஸ் மூன்றாம் பாகத்தை தொடர்ந்து சுமார் 17 ஆண்டுகள் கழித்து மேட்ரிக்ஸ் படத்தின் 4ம் பாகத்தை இயக்க இயக்குநர் லானா வச்சோவ்ஸ்கி முடிவெடுத்துள்ளார். இதில் கீனு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனம் பிரியங்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பிரியங்கா சோப்ராவும் முயற்சி செய்து வருவதாகவும், இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

டிரிப்பிள் எக்ஸ் 3 படத்தில் நாயகியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வின் டீசல் நடிக்கும் டிரிப்பிள் எக்ஸ் 4ம் பாகத்திலும் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், பிரியங்கா சோப்ராவின் மேட்ரிக்ஸ் 4ம் பாகம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் இரு நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர்.

‘மேட்ரிக்ஸ் 4’ தவிர்த்து நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வீ கேன் பி ஹீரோஸ்’, ‘தி வொயிட் டைகர்’, அமேசான் ப்ரைம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சிட்டடேல்’ ஆகிய படங்கள் மற்றும் சீரிஸ்களிலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

‘மேட்ரிக்ஸ் 4’ படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version