― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்என்னைக் குறி வைத்த போது அழுதேன் தொடர்ந்து ஏமாற்றப்பட்டேன்! அந்த நாட்களை நினைவு கூர்ந்த பார்வதி

என்னைக் குறி வைத்த போது அழுதேன் தொடர்ந்து ஏமாற்றப்பட்டேன்! அந்த நாட்களை நினைவு கூர்ந்த பார்வதி

என்னைக்குறி வைக்கும் போது நான் அழுவதை நிறுத்தவில்லை

தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமாக இருக்கும் பார்வதி, அழுதேன், ஏமாற்றப்பட்டேன் என்று சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

e8c8ba5fcf48b677bc04308b3f095464
இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. இதை தொடர்ந்து தனுஷ் உடன் ‘மரியான்’, ‘பெங்களூர் டேஸ்’ தமிழ் ரீமேக்கான ‘பெங்களூர் நாட்கள்’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைப்பருவ போட்டோவை பகிர்ந்து, ”எனக்கு கேமரா என்றாலே  பயம். அந்த லென்ஸ் மிக ஆழமாக என்னைக்குறி வைக்கும் போது நான் அழுவதை நிறுத்தவில்லை. சில, பல முயற்சிகளுக்கு பிறகு நான் அங்கே தைரியமாக நின்றேன்.

அந்த சிரிப்பு அங்கே எப்படி வந்தது ? நான் ஏமாற்றப்பட்டேன் மக்களே.நான் சிரித்தால் ஜெம்ஸ் (சாக்லெட்) வெளியில் வரும் என்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version