srirangam pallakku - 2026

ஸ்ரீரங்கத்தில் மீட்டெடுக்கப்பட வேண்டிய அவசியமானவைகள்!

புகார் பெட்டி உரத்த சிந்தனை
srirangam pallakku - 2026

ஸ்ரீரங்கத்தில் மீட்டெடுக்க வேண்டிய அவசியமான விசயங்கள்.

1) சுழல்முறையாக பரம்பரை அறங்காவலர்கள் பொறுப்பேற்க கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தடை ஏற்படுத்தபட்டு இருக்கிறது. காரணமாக சொல்லப்படுவது யாதெனில் ஸ்ரீரங்கத்தில் உத்திர,சித்திரை, அடையவளஞ்சான் தெருக்களில் வசிக்கும் எவருக்கும் இன்னும் அடிமனை வாடகை வசூலிக்க முடிவெடுக்கப்படாமல் இருந்தாலும் பரம்பரை அறங்காவலர்களுக்கு மட்டும் வாடகை நிலுவை என காரணம் காட்டி அறங்காவலர் பொறுப்பேற்க விடாமல் சதிவலையில் சிக்கவைத்தது.

2) தேவஸ்தானம் நிர்வாகம் தனது கடைநிலை ஊழியரை கொண்டு உள்துறை எனும் பூஜை, புறப்பாடு உள்ளிட்ட மத விசயங்களை கவனிக்க மணியக்காரர் எனும் பொறுப்பை சட்டவிரோதமாக நேரடியாக இயக்குவதால் ஆகம ,கோவில் பழக்கவழக்கங்களுக்கு விரோதமாக உள்துறை யை தங்கள் போக்கிற்கு சீரழித்ததை மீட்கபடவேண்டும்.

3)அர்ச்சகர்களின் 650 முறைநாட்களை நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அர்ச்சகர்களை மிரட்டி தங்கள் ஏதேச்சாதிகார போக்கிற்கு சாதகமாக பணியவைப்பது. (இந்த விவகாரம் கவனிக்கப்டவில்லை என்றால் அரசு தங்கள் திட்டத்தை நிறைவேற்ற நினைத்தால் வயலூர் விபரீதம் இங்கும் அறங்கேறிவிட வாய்ப்புகள்.. தலைமேல் கத்தி)

4)காலியாக உள்ள ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் ஸ்வாமிகளை திருக்கோவில் பணியாளராக கருதாமல் அவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை உடையவர்களான ஸ்ரீஸ்தலத்தார்கள் எனும் வைணவ மதகுருமார்கள் சேர்ந்து சுதந்திரமாக தங்கள் மதத்தலைவரை(ஜீயர் ஸ்வாமிகள் ) தேர்ந்தெடுக்க வைப்பது.

5)நம்பெருமாள் கட்டளையால் ஸ்ரீபராசர , ஸ்ரீவேதவ்யாஸ பட்டர்கள்,அரையர்களுக்கு நடத்தப்படும் பிரம்மரத மரியாதையை (தோளில் சுமப்பது) மக்கள் சக்தியால் தருமபுர ஆதினத்தில் பட்டணபிரவேசத்தை மீட்டது போன்று மீண்டும் நடத்திட வைப்பது.

6)திருக்கோவிலின் எவ்வித பணியாளராக இல்லாமல் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வசூல் ஈட்டி தந்து வாலண்டரி சர்வீஸ் எனும் அடியாட்களை உடனடியாக வெளியேற்றுவது, பணி ஓய்வு பெற்றாலும் தனியார் கம்பெனிகளின் சம்பளத்தில் ஏஜன்டாக இருந்து தங்களின் சுயவிருப்பு வெறுப்புகளை ஒட்டுண்ணிகளாக இருந்து அடுத்தடுத்து வரும் அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து

கோவில் பூஜை,மரபுகளை சரிசெய்யாவிட்டாமல் சுயஇன்பமடையும் கழிசடைகளை வெளியேற்றுவது

7)மேற்கண்ட விவகாரங்களை ஸ்ரீரங்கம் கோவில் வைணவ மதகுருமார்களான ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள், அர்ச்சகர்கள், ஸ்தானிகர்கள், அரையர்கள், பண்டாரிகள் சாத்தாத வைணவர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து ஒற்றுமையாக செயல்படவேண்டும்.

ஏனைய ஊர்களை போல திருக்கோவில்கள் அதற்குண்டான கோவில் குடிகள் அழிந்து பாழ்பட்டு நிற்பதை போல அல்லாமல் இங்கு இன்னும் அதற்குரிய மேற்சொன்ன குடிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் இருக்கிறார்கள் என்பது மட்டுமே சற்று ஆறுதல்.

இவ்விசயங்களை மீட்டு மரபுகள்,நீண்டகாலம் பழக்கவழக்கங்களை காப்பாற்றினால் மட்டுமே ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் பகவத் ஸ்ரீராமாநுஜரின் வைணவ மத சம்ப்ரதாயம்(மதம்) காப்பாற்றப்படும்.

இவைகளை மீட்க தேவையான அழுத்தங்களை பக்தர்கள் அனைத்து தரப்பினருக்கும் கொண்டுசெல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

  • சேது அரவிந்த் (திருச்சி பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.