உங்களுக்காக உந்தியா !

சமையல் புதிது

urulaikizhanku - 2026தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு : கால்கிலோ அவரைக்காய்-100 பட்டாணி-100 கத்திரிக்காய்-கால் கிலோ,உப்பு தேவையான அளவு

மசாலா :

சீரகம் -அரை ஸ்பூன் தனியா-2 ஸ்பூன் பிரிஞ்சி இலை -1 கரம் மசாலா – 2 சிட்டிகை தனியா தூள் -ஒன்றரை ஸ்பூன் நல்லெண்ணெய் – 6 ஸ்பூன் மஞ்சள் பொடி – கால் ஸ்பூன் மிளகாய் பொடி – 1 ஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய்-7 மல்லித் தழை 1 கட்டு

செய்முறை :

மல்லித்தழையைக் கழுவி, இஞ்சி, பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து அரைக்கவும். இத்துடன் கரம் மசாலா பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி நல்லெண்ணெய் சேர்த்து பிசையவும்.இதற்கு தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

வாணெலியில் எண்ணெய் விட்டு, சீரகம் தனியா பிரிஞ்சியிலை, போட்டு தாளித்த பின்  அவரை, உருளைக் கிழ்ங்கு, கத்திரிக்காய் ஆகியவற்றை நறுக்கி, தயாராக இருக்கும் மசாலாவை, சேர்த்து தண்ணீரும் கலந்து காய் வெந்ததும்,காய்க்கு மட்டும் தேவையான உப்பைச் சேர்த்து,கலந்து  இறக்கவும்.உந்தியா தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.