ஆழியாறு – பரம்பிக்குளம் (பி.ஏ.பி) திட்டம்: ஒரு பார்வை!

parambikulam dam - 2026

கொங்கு மண்டலத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை – கேரள அரசுகள் இணைந்து பி.ஏ.பி (பரம்பிக்குளம் – ஆழியாறு) திட்டத்தை இறுதிப்படுத்தியது. தமிழக முதல்வர் காமராஜர், கேரள முதல்வர் நம்பூதரிபாட் காலத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு தமிழகத்தின் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி உறுதுணையாக இருந்ததை எல்லாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சார்பில் இரண்டு அணைகள் இன்னும் கட்டவில்லை. தமிழக – கேரள அரசுகளின் சார்பில் 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் இந்த அணையின் கட்டுமானத்திற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது அப்பகுதி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி கேரளாவில் இருந்து மேற்கு நோக்கி பாய்ந்து இறுதியில் அரபிக் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை கிழக்கு நோக்கி தமிழகத்திற்கு திருப்பினால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி அடையும் என்று அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அன்றைய கேரள முதல்வரும், கம்யூனிச தலைவருமான நம்பூதரிபாட் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பி.ஏ.பி பாசனத் திட்டம் உருவாக்கப்பட்டது. அன்றைய பிரதமர் நேரு இந்த திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பெருவாரிப் பள்ளம், தூணக்கடவு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் உப்பாறு ஆகிய ஒன்பது அணைகள் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி கேரள அரசு இடமலையாறு என்ற பகுதியில் ஒரு அணையைக் கட்டி முடித்தபிறகு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு ஆகிய அணைகளை கட்ட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 1985ஆம் ஆண்டு கேரள அரசு இடமலையாற்றில் அணையை கட்டிமுடித்துவிட்டது. அதன்பின், தமிழக அரசு இந்த இரண்டு அணைகளை கட்டாமல் காலந்தாழ்த்தி வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் குரலெழுப்பினாலும், ஆட்சி தான் மாறுகிறதே அன்றி காட்சிகள் மாறுவதில்லை.
இந்த பி.ஏ.பி திட்டத்தில் 6 ஆறுகள் மலையின் மீதும், 3 ஆறுகள் மலை அடிவாரத்தில் உள்ள சமவெளிப் பகுதியிலும் உற்பத்தியாகின்றன. இந்த ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டியும், கால்வாய்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூலமாக தண்ணீர் பெறப்படுகிறது.

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் மூலம் 32 டி.எம்.சி., வரை தண்ணீர் கிடைத்தது. மழைப்பொழிவு குறைந்துவிட்டதால் 13 டி.எம்.சி., மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.

கேரளாவின் இடமலையாறு அணைக்கு இட்டலியாற்றில் இருந்து செல்லும் தண்ணீரை நாம் ஆனைமலையாறு அணை மூலம் தேக்கினால் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும்.

கடந்த 40 ஆண்டுகளில் மேல்நீராறு பகுதியிலிருந்து சராசரியாக 9 டி.எம்.சி., தண்ணீர் வருகிறது. இந்த நீரானது சோலையாறு வழியாக பரம்பிக்குளம், தூணக்கடவு, சர்க்கார்பதி மின்நிலையம் போன்ற பகுதிகள் வழியாக திருமூர்த்தி அணையை சென்றடைவதற்கு 3 நாட்கள் ஆகிறது. இதில் 2.5 டி.எம்.சி., தண்ணீர் வீணாவது மட்டுமல்லாமல், காண்டூர் கால்வாயின் அளவு 1,150 கனஅடி தான். இதனால் நீர்வரத்து அதிகமாகும் காலங்களில் உபரி நீர் வீணாக அரபிக் கடலில் கலக்கிறது. இந்த நீரை நாம் பெற நல்லாறு அணையை கட்டியாக வேண்டும்.

மேல்நீராறு அணையிலிருந்து நல்லாறு அணைக்கு சுரங்கம் மூலமாக 7.25 டி.ம்.சி., தண்ணீரை கொண்டுவர முடியும். அப்படி பெறும் நீர் சில மணி நேரத்தில் திருமூர்த்தி அணைக்கு வந்து சேரும்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

இந்த இரண்டு அணைகளை கட்ட தமிழகத்திற்கு பூரண உரிமையுண்டு. ஆனால் என்ன காரணமோ, தமிழக அரசு இப்பகுதி விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்க மறுக்கிறது. கடந்த ஆண்டில் இந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகி, குடிநீருக்கு வழியில்லாமல் போய்விட்டது. இந்த அணைகள் கட்டப்படாவிட்டால் கோவை, திருப்பூர் பகுதியில் விவசாயம் முற்றிலுமாக சிதைந்துவிடும்.

இப்பகுதி விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை இணைத்து ஒரு இயக்கமாக உருவாக்கி விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தி தொடர் போராட்டங்களை கட்டமைத்தாக வேண்டும்.

#ஆழியாறு_பரம்பிக்குளம்
#Aliyar_Parambikulam

– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

(கட்டுரையாளர் – வழக்கறிஞர், திமுக., செய்தித் தொடர்பாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories