instagram

நொய்டாவில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ என்ற குரூப் ஒன்றை ஆரம்பித்து 27 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். குரூப்பில் மாணவர்கள் சக மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பாக பேசியுள்ளனர். அவர்களின் பேச்சுக்களின் ஸ்கீரின் சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சி அளித்தன. அத்துடன் அந்த சக பள்ளி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும் பகிரிந்துகொண்டனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக வெடிக்க, காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

cell
cell

இந்நிலையில், 12ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது நிரம்பிய மாணவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த மாணவன் குரூப்பை தொடங்கிய அட்மின் ஆவார். இதுதொடர்பாக குரூப்பில் இருந்த மற்ற மாணவர்களிடம் விசாரித்த போது, தங்களுக்கு அப்படி ஒரு குரூப் ஆரம்பிக்கப்பட்டதே தெரியாது என்றும், மற்ற நண்பர்கள் சேர்த்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending