அப்பாச்சி தீர்வு: காலரா, வேனல் கட்டி, கூந்தல் வளர, காயம், பூரான் கடி…!

Published:

health tips - 2026

கூந்தல் நீண்டு வளர…

செம்பருத்திப் பூக்களை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்தத் தைலத்தை தலைக்கு தேய்த்து வர கூந்தல் நீண்டு வளரும். மூளையும் கண்களும் குளிர்ச்சி பெறும். தலையில் பொடுகு ஏற்படாது.

காயத்துக்கு…

மருதோன்றி இலைகளை வேகவைத்து அதன் நீரைக் கொண்டு காயங்கள். வீக்கங்களைக் கழுவி வர வலி. உபாதை குறையும்.

காலரா சரியாக…

மஞ்சளையும் நீர்த்த சுண்ணாம்பையும் தனித்தனியே உலர வைத்து தூள் செய்து சம அளவு கலந்து அரைத்தால் செந்தூரம் போல் ஆகும். இதில் ஒரு சிட்டிகையளவு எடுத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை நீரில் கலந்து கொடுத்து வர காலரா குணமாகும்.

வேனற்கட்டிகளுக்கு…

பப்பாளிக் காயை இலேசாகக் கீறினால் அதிலிருந்து பால் வடியும். அந்தப் பாலை சேகரித்து அதில் சிறிது வெங்காயமும் அரை அவுன்ஸ் சுத்தமான நீரும் (டிஸ்டில்டு வாட்டர்) சேர்த்துக் களிம்பு போல் அரைத்து வேனல் கட்டிகளுக்கு போட்டு வர கட்டி பழுத்து உடையும்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

பூரான் கடிக்கு…

மிளகை வெற்றிலைச் சாறு விட்டரைத்து தினமும் காலையில் சாப்பிட நான்கு நாள்களில் கடி விஷம் மாறி விடும். அப்போது புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img