health tips - 2026

அப்பாச்சி தீர்வு: வாய்ப்புண், நாக்குப்புண், ஜலதோஷம், குரல் கரகரப்பு, உமிழ்நீர் சுரத்தல்..,

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

வாய்ப்புண்

500 கிராம் முள்ளங்கிக் கீரையில் 100 கிராம் சிறிய வெங்காயத்தை நறுக்கிப்போட வேண்டும். அதனுடன் புழுங்கல் அரிசியைக்கழுவிய நீரிலிருந்து

1 லிட்டர் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பையும் போட்டு வேகவைக்க வேண்டும்.

வேகவைத்த கீரையை ஒரு புதிய அழுக்கில்லாத துணியில் வைத்துப் பிழிந்துகொண்டு வேக வைத்த கழுநீரில் கலக்க வேண்டும். பின்பு இதை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூளையும், 100 மிலி எலுமிச்சம் பழச்சாற்றையும் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். சூடானதும் இறக்கி வைத்து சுண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதை தினமும் மூன்று நேரம் பருகிவர உடலின் அதிக உஷ்ணத்தால் ஏற்படுகின்ற வாய்ப்புண்மும், வயிற்று வலியும் குணமாகும்.

வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள்

வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்பட்டு வருந்துபவர்கள் அகத்திக்கீரையை அடிக்கடி சமைத்து உண்பது அவசியம். மேலும் வாய்ப்புண்கள் உள்ள இடத் பசுவின் வெண்ணெயைத் தடவி வந்தால் விரைவில் புண்கள் ஆறும்.

உமிழ்நீர் அதிகம் சுரந்து உடல் வீக்கம்

உளுந்து, அரிசி, விளாங்காய் இம்மூன்றையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து நெய்யுடன் கலக்க வேண்டும். பின்பு அதை உடம்பிலும், தலையிலும் பூசி தேய்த்து வந்தால் உமிழ்நீர் அதிகம் சுரந்து உடல் வீங்குதல் குணமாகும்.

குரல் கரகரப்பு

இனிமையான குரல் கம்மிப் போவதற்கும், கரகரப்பாவதற்கும் கபம் ஒரு காரணமாகும். தூதுவளையை கீரையாகவோ அல்லது பச்சையாகவோ தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால் கபம் அகன்று குரல் இனிமை பெறும்.

ஜலதோஷம்

நீளமான மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் ஒரு முனையை விளக்கின் ஒளியில் காண்பித்து அங்கே நெருப்பு பற்றியதும் புகை வர ஆரம்பிக்கும். அந்தப் புகையை லேசாக முகர்ந்து வர ஜலதோஷம் குணமாகும்.

சளி, ஜலதோஷம்

எலுமிச்சம் பழத்தின் சாறு, தண்ணீர், தேன் இம்மூன்றையும் சம அளவு எடுத்து கலந்து அருந்திவர சளி, ஜலதோஷம் அகலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fifteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.