ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Published:

17 June13 karthi chidambaram - 2026ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 1.16 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. வழக்கு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் தீவிரமாக விசாரித்து வருகிறது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இப்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது இன்று அமலாக்கப்பிரிவு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.

Related articles

Recent articles

spot_img