புல்வாமா பாணியில் மேலும் ஒரு தாக்குதல்! திட்டமிடும் பயங்கரவாதிகள்!

Published:

kashmir5 - 2026புல்வாமா பாணியில் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன என்று  தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப் பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

இதற்கு பழிவாங்கும் விதமாக மிக விரைவில் மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை அரங்கேற்ற அந்த அமைப்பு திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு காஷ்மீரின் காஸிகண்ட், அனந்த்நாக்  பகுதியில் இப்படி ஒரு தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்கள் எச்சரித்துள்ளனவாம்! மேலும், இந்த முறை டாடா சுமோ எஸ்யுவி வாகனத்தை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பும், கண்காணிப்பும் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மிகுந்த கவனத்துடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்!

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img