அமைதியும் ஆர்ப்பாட்டங்களும்! வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்!

Published:

congress office mumbai - 2026

மகாராஷ்டிரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது! மகாராஷ்டிரத்தில் உள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது! 7 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது!

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான
இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது! மகாராஷ்டிரத்தில் உள்ள 48 தொகுதிகளில் 41 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது! 7 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது!

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

காலை முதலே முன்னிலை நிலவரங்கள் வெளியான சூழ்நிலையில் பாஜக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்

அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகங்களில் மயான அமைதி நிலவுகிறது. காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.

மும்பையில் உள்ள ஜிஎஸ்டி காங்கிரஸ் அலுவலகத்தில் காவலர்களை தவிர வேறு எவரும் இல்லை! அதேநேரம் பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் அதிக அளவில் கூடி இனிப்புகளை வழங்கியும் கைதட்டி ஆரவாரித்து ஆடிப்பாடியும் மோடியின் 2-வது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்!

Related articles

Recent articles

spot_img