eletric 1 - 2026நெடுங்கண்டத்தில் கேரள மின்துறை அமைச்சர் எம்.எம். மணி  கூறியதாவது, மாநிலத்தில் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையும், நீர் வரத்தும் குறைந்ததால் மின் உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தினமும் மின் தடைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

இடுக்கி அணையில் மொத்த அளவில் 13 சதவீதம் மட்டும் தண்ணீர் உள்ளது. எனவே மாநிலத்தில் பத்து  நாட்களுக்குள் மின் வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தினமும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மின் தடைக்கு வாய்ப்பு உள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற முயற்சிகள் நடந்து வருகின்ற போதும், அதற்கு வழித்தடத்தில்  மின் கம்பிகள் சரிவர இல்லை, என்றார்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending