jammu kashmir 1 - 2026ஜம்மு – காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, கிஷ்த்வார் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

கிஷ்த்வார் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், ராணுவ வீரர்களை போன்ற சீருடை அணிந்திருந்தால், பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது கடினமாகி, குழப்பம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள், ராணுவ சீருடை போன்ற உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல், ஜவுளி கடைகளிலும், ராணுவ சீருடை போன்ற உடைகளை விற்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending