தீபாவளி வருது… சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!

சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
koyambedubusstation - 2026

சென்னையில் 5 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள்!

தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலயில், சென்னையில் இருந்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் வகையில்,வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மாதவரம் சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து, ஆந்திராவுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், சேலம் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் மெப்ஸ் பகுதியில் இருந்து தஞ்சை, கும்பகோணத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தாம்பரம் சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.