‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்கு இல்லை: நீதிமன்றம் செல்கிறார் உதயநிதி

Published:

Nanbendaசென்னை: ‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டு இருப்பதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘நண்பேன்டா’ படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். ‘யு’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து வரி விலக்கு அதிகாரிகளுக்கு படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்துவிட்டனர். படத்தில் ஆபாச காட்சிகளோ, ஆபாச வசனங்களோ இல்லாத பட்சத்தில் எதற்காக வரி விலக்கு மறுக்கிறார்கள் என வரி விலக்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதே போன்ற பிரச்னை, உதயநிதியின் முந்தைய படமான ‘இது கதிர்வேலன் காதல்’ படத்துக்கும் ஏற்பட்டது. அதற்கும் உதயநிதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img