தீபாவளிக்கு மூன்று நாட்கள் அரசு விடுமுறையாம்..!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
04 Nov02 Diwali - 2026

தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீபாவளிக்கு மறு நாள் திங்கள் கிழமை அரசு விடுமுறை விடப் படுவதாக அறிவிக்கப் பட்ட அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதை அடுத்து, தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக, தீபாவளி ஞாயிற்றுக் கிழமை வருவதை அடுத்து, முந்தைய நாள் சனிக்கிழமை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த நாளுக்கு பதிலாக வேறொரு நாளில் வேலை நாளை அறிவித்துக் கொள்ளலாம் என்று கூறப் பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பொதுமக்களின் வசதி கருதி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

go leave diwali - 2026

தீபாவளி பண்டிகை வரும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் வரும் 28 ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 ஆம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.