உடன்குடி அனல் மின் திட்டம் ரத்து செய்யப்படக் காரணம்: நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

natham-viswanathanசென்னை: உடன்குடி அனல் மின் திட்டம் ரத்து செய்யப் படக் காரணம் என்ன என்பதை சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கமாகத் தெரிவித்தார். உடன்குடி அனல் மின் நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து செவ்வாய்க்கிழமை சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கொண்டு வந்தன. விசாரணைக் கமிஷன் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அரசால் வெள்ளை அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவை கோரின. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்தக் கேள்விகளுக்கு மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார். அப்போது, 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் உடன்குடி திட்டம் அறிவிக்கப்பட்டு “பெல்” என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவர்கள் ஆட்சியில் 4 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தி இருந்தால் அப்போதே உடன்குடியில் மின்சார உற்பத்தி தொடங்கி இருக்கும். முதலில், அந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தை பெறுவதற்காக அந்த 4 ஆண்டு காலத்தில் ஒரு வருவாய் அலுவலரைக்கூட அந்த அரசு நியமிக்கவில்லை. அந்தத் திட்டத்துக்கு தேவைப்படும் எரிபொருளான நிலக்கரியை தொடர்ந்து பெறுவதை தி.மு.க. ஆட்சி ஏற்படுத்தவில்லை. உடன்குடி திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் பெறவில்லை. அந்த திட்டத்துக்கான நிதி ஆதாரத்தை பெறுவதற்கான நிதி நிறுவனத்தையும் அவர்கள் கண்டறியவில்லை. இப்படி ஒரு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டறிந்து, தமிழ்நாடு மின்சார வாரியமே அதை செயல்படுத்தும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு தேவையான வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக மத்திய அரசின் எம்.எம்.டி.சி. நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி 14.10.13 அன்று கிடைத்தது. பின்னர் உடன்குடி மின் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 19.7.13 அன்று வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட 4 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் பெல் மற்றும் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஆகியவை தகுதி பெற்றன. அதிலிருந்த சில மாறுபட்ட தொழில்நுட்ப மற்றும் வர்த்தக விவரங்கள் சரி செய்யப்பட்ட நிலையில், 2014 மார்ச் முதல் மே மாதம் வரை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. குறைந்த விலைப்புள்ளி செலுத்தியதால், உடன்குடி திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கால் மேலும் காலதாமதம் ஏற்பட்டது. அந்த வழக்கில் 16.10.14 அன்று தடையாணை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பின்னர் 18.10.14 அன்றே பெல் நிறுவனத்தின் விலைப் புள்ளிகள் பெறப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி கொடுத்ததால் அது தேர்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ஜெர்மன் நாட்டு நிறுவனம் ஆலோசகராக நியமிக்கப்பட்டது. அந்த நிறுவனம், சீனா நிறுவனம் மற்றும் பெல் நிறுவனத்தின் விலைப் புள்ளிகளை ஆய்வு செய்து 30.12.14 அன்று அறிக்கை தாக்கல் செய்தது. பெல் நிறுவனம் மற்றும் சீன நிறுவனம் அளித்த விலைப்புள்ளிகளில் உள்ள குறைபாடுகளை பட்டியலிட்டுக் காட்டி, இவற்றை ஏற்பதா, வேண்டாமா என்பதை, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியது. குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் வேறு வழியில்லாமல், ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளி சட்டத்தின்படி அவை ரத்து செய்யப்பட்டன. பின்னர் சீன நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அரசு காட்டிய காரணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தது. இனி ஏன் விசாரணை தேவை? டெண்டரை தவறாகப் போட்டது அவர்களின் தவறு. இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. இந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியது தி.மு.க. அரசுதான். குறைந்த விலை மின்சாரம் கிடைக்கும்போது கூடுதல் விலை மின்சாரத்தை ஒரு யுனிட் வாங்கியிருந்தாலும் நீங்கள் சொல்வதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். கற்பனையாக குற்றச்சாட்டு வைக்க வேண்டாம்… என்று பதிலளித்தார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories