பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெறும்: பி.தனபால்

சற்றுமுன்

சென்னை தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார். தமிழக அரசின் 2015-16 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது தொடர்பாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 4 நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து பேரவைத் தலைவர் பி.தனபால் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக சட்டப் பேரவை வியாழக்கிழமை நடைபெறாது. வெள்ளிக்கிழமை பட்ஜெட் அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கும். சனிக்கிழமை, பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டின் முன் பண மானியக் கோரிக்கைகளும், நடப்பு நிதி ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் பேரவையில் தாக்கல் செய்யப்படும். அவற்றின் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். அன்று நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாதம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால், திங்கள், செவ்வாய் இரு நாட்களிலும் நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாதம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை அன்று பொது விவாதங்களுக்கு பதில் அளிக்கப்படும் என்றார் தனபால்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.