இந்திய அணி வெற்றிபெற நாக்கை அறுத்த ரசிகர்

Published:

velor வேலுர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இன்று நடைப்பெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என கூறி தனது நாக்கை துண்டித்து வேடியப்பன் சாமிக்கு காணிக்கை செலுத்தி கிரிகெட் ரசிகர் ஒருவர் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடைபெற்றதை யொட்டி சுதாகர் வேலைக்கு செல்லாமல், பொன்னேரியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்க்கு சென்று தொலைகாட்சியில் கிரிகெட்டை பார்க்க முடிவு செய்துள்ளார். அங்கு சென்ற அவர், இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றியடைய வேண்டும் என்பதற்க்காக பாட்டி வீட்டின் அருகே உள்ள வேடியப்பன் கோவிலுக்கு கத்தியுடன் சென்று தனது நாக்கை வெட்டி வேடியப்பனிடம் வைத்து போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர் வாயில் ரத்ததுடன் வருவதை பார்த்து அவரது உறவினர்கள் உடனடியாக வேலூர் தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img