இமய மலைக்குக் கிளம்பிவிட்டார் ‘ஆன்மிக அரசியல்’ ரஜினி!

சற்றுமுன் சென்னை தமிழகம்

rajinikanth political - 2026

இமயமலைக்குப் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். அங்கு 10 முதல் 15 நாட்கள் தங்கியிருக்க திட்டம் இட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் புறப்பட்ட அவர், சிம்லா சென்று அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்.

இந்த முறை, தனது இமய மலைப்பயணத்தில், இமயமலையில் அவர் 10 முதல் 15 நாட்கள் வரை தங்க திட்டமிட்டுள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, அரசியல் இயக்கம் தொடங்க உள்ள நிலையில் செல்வதால் புதிதாக வேண்டுதல் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக, பாபா தரிசனத்துக்கு இமயமலைக்குச் சென்று வருவார்  ரஜினிகாந்த். இந்த முறை தனது ஆன்மிக அரசியல் அறிவிப்பை வெளியிட்டதால், ஆன்மிகப் பயணத்தின் மூலம் சிறப்பு வேண்டுதல் எதுவும் இருக்கக் கூடும் என்று கருத்துகள் உலாவந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.