காவிரி ஆணையம் இல்லையென்றால் சுங்கச்சாவடி கட்டணமும் இல்லை: வேல்முருகன்

சற்றுமுன் தமிழகம்

velmurugan - 2026காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததோடு அதற்கு ஆறு வார காலக்கெடுவும் விதித்துள்ளது. ஆனால் அந்த ஆறு வார காலம் வரும் 29ஆம் தேதிக்குள் முடிவடைய உள்ளது.

இன்னும் ஒரு வாரமே காலக்கெடு இருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தெரியவில்லை என்பதால் தமிழக அரசியல் கட்சிகள் கொந்தளித்துள்ளது

இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்வோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக்கு மற்ற கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளதால் வரும் 29ஆம் தேதிக்கு பின்னர் சுங்கச்சாவடிகளில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.