பழநி, திண்டுக்கல் அஞ்சல் கோட்டம் இணைய வழி சேவைக்கு ஜூன் 26 முதல் மாற உள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப பணிகள் காரணமாக இன்று முதல் 25 வரை அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட உள்ளது.இந்திய அஞ்சல் துறையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு, தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படுகிறது. திண்டுக்கல் அஞ்சல் கோட்டம் முற்றிலும் இணைய வழி சேவைக்கு ஜூன் 26 முதல் மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக தொழில்நுட்ப பணிகளுக்காக இன்று முதல் 25 வரை கடித போக்குவரத்து, பணபரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படுகிறது. ஜூன் 26 முதல் அஞ்சலக பணிகள் நடைபெறும்.
இன்று முதல் தபால் பரிவர்த்தனை நிறுத்தம்
Popular Categories




