உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை: கனிமொழி கருத்து

சற்றுமுன் தமிழகம்

06 Aug13 Kanimozhi - 2026

திமுக கனிமொழி பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், “தமிழ்நாடு காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றும், உச்சநீதிமன்றம், பணி இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விஷாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று 1997ல் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை 2013ம் ஆண்டு செயல்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு அலுவலகங்களிலும், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது. சட்டத்தை அமல்படுத்த வேண்டிய, காவல்துறையிலேயே விஷாகா கமிட்டி இல்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்றார். மேலும் காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது, அவமானகரமானது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.