டிடிவி தினகரனின் ‘துணை’ பறி போகிறது..!

Published:

06 Aug13 TTV Dinakaran - 2026

டிடிவி தினகரன் தன் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த ‘துணை’யைத் தூக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, அமமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் டிடிவி தினகரன்

அதிமுக மீது உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருப்பதாக அவர் செய்தி டிவி ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.  எனவே அமமுக கட்சியை ஒரு தனிக் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் மும்முரத்தில் டிடிவி தினகரன் ஈடுபட்டுள்ளார்

இந்நிலையில் அதன் பொதுச் செயலாளராகவும் தினகரன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கட்சியை பதிவு செய்யும்போது அவர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியை பதிவு செய்வார் என்று கூறப்படுகிறது! அதிமுகவை உரிமை கோரி பேசி வந்ததால் அமமுக.,வை ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்ய இயலாத நிலை தினகரனுக்கு ஏற்பட்டது. அதற்காகவே அவர் அதை ஒரு கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார்

இந்நிலையில் அமமுக வின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தினகரன் முடிவு செய்துள்ளார்

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக பி கே சசிகலா உள்ளார்! அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டு, அதிமுக., வை உரிமை கோரும் வழக்கை தொடர்ந்து நடத்துவார் என்று கூறப் படுகிறது.

Related articles

Recent articles

spot_img