#தேர்தல் முடிவுகள் 2019 : கார்த்தி சிதம்பரம், கனிமொழி முன்னிலை!

Published:

karthi chidambaram - 2026
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தேர்தல் முடிவுகளை ஆதரவாளர்களுடன் பார்த்து வருகிறார்…

#தேர்தல் முடிவுகள் 2019 : முன்னிலை நிலவரம்!

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.

இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டுவருகின்றன.

இந்நிலையில் தொடக்க கட்டத்தில் உள்ள முன்னிலை முடிவுகள் வெளியிடப் பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முதலில் முடிவுகள் அறிவிக்கப் பட்டன. தொடர்ந்து தேஜகூ., பல இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் முன்னிலை பெற்று வருகிறார். அவர் தேர்தல் முடிவுகளை சிவகங்கையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார்.

திமுக.,வின் கனிமொழி தூத்துக்க்குடியில் முன்னிலை பெற்று வருகிறார்.

 

Related articles

Recent articles

spot_img