ரூமுக்கு போலாம் என அழைத்தார் இயக்குனர்… போனேன்… ஆனால்?! வித்யாபாலன் சொன்ன ரகசியம்!

கிசுகிசு சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
vidyabalan actress - 2026

ரூமுக்குள் போய் பேசலாம் என அழைத்தார் அந்த இயக்குனர். போனேன்… ஆனால் ..? என்று நடிகை வித்யா பாலன் சொன்ன ரகசியம் என்ன தெரியுமா?!

நடிகை வித்யா பாலன் தற்போது நேர்கொண்டபார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி உள்ளார். தயாரிப்பாளர் போனிகபூர் வற்புறுத்திக் கேட்டதால் தான், அவர் இந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தாராம். இதனை வித்யாபாலன் முன்பே கூறியிருக்கிறார்!

இந்நிலையில் சென்னையில் வித்யாபாலனிடம் இயக்குனர் ஒருவர் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று, ஒரு பேட்டியில் நாசூக்காக தெரிவித்துள்ளார் வித்யா பாலன் .

அவர் இது குறித்து கூறியிருந்த போது… எனக்கு நன்றாக நினைவிருக் கிறது! அப்போது நான் சென்னையில் இருந்தேன்! இயக்குனர் ஒருவர் என்னை சந்திக்க வந்தார்!

காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் எனக் கூறினேன். ஆனால் அவரோ நிறைய பேசவேண்டும்; ரூமுக்குள் செல்வோமே என்று ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்!

ரூமுக்குச் சென்று கதவை திறந்து வைத்து பேசிக் கொண்டிருந்தேன்! ஆனால் வெறும் ஐந்து நிமிடத்தில் அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்! – என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.

இப்போது அந்த இயக்குனர் யாராயிருக்கும் என்பதில் சூடுபிடித்துள்ளது சமூக வலைத்தள ரசிகர் உலகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.