காதலுக்காக தன்னை மாற்றிக்கொண்ட நயன்தாரா….இப்ப என்ன ஆச்சு செண்டிமெண்ட்?

Published:

nayan

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின் இருவரும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில், விஜய்சேதுபதி கலந்து கொண்டார். ஆனால், நயன்தாரா வரவில்லை. அதன்பின் விஜய் சேதுபதியை வைத்து சில காட்சிகள் மட்டும் விக்னேஷ் சிவன் எடுத்துவிட்டு அவரை அனுப்பிவிட்டார்.அதன்பின் 12 மணிக்கு நயன்தாரா வந்தார். அவரை வைத்தும் சில காட்சிகளை விக்னேஷ் சிவன் எடுத்தார்.

pooja

வழக்கமாக தான் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான எந்த விழாக்களிலும் நயன்தாரா கலந்து கொள்வதில்லை.அப்படி கலந்து கொண்டால் அந்த திரைப்படம் ஓடாது என்பது அவரின் செண்டிமெண்ட். ஆனால், இது காதலனின் திரைப்படம். மேலும், அவர்தான் இப்படத்திற்கு தயாரிப்பாளரும் கூட. எனவே, செண்டிமெண்டை உடைத்து விட்டு வந்துள்ளார். அதேநேரம், அவர் பூஜை நடக்கும் போது வராமல், 12 மணிக்கு வந்து படப்பிடிப்பில் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img