தர்பூசணி கப் கேக்
தேவையான பொருட்கள்
மைதா மாவு. 2 கப்
தர்ப்பூசணி பழம் ஜூஸ் 1 கப்
சீனி(அரைத்து சேர்க்கவும்) 1 கப்
எண்ணெய். 1/2 கப்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் -1 டீஸ்பூன்
சிவப்பு கலர் எஸ்ஸன்ஸ். 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு. 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர். 1 ஸ்பூன்
1/2 கப் எண்ணெய்,1 டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். 2 கப் மைதா மாவுடன் ஒரு டீஸ்பூன் சோடா உப்பு,கலந்த எஸென்ஸ் கலவை மற்றும் 1 கப் அரைத்த தர்ப்பூசணி ஜூஸ்ஸை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்பு 1 கப் சீனியை நன்றாக அரைத்து சேர்க்கவும்.சிவப்பு கலர் எஸ்ஸன்ஸ் தேவை என்றால் சேர்க்கவும்.
பின் நன்கு கலந்து விடவும்.மாவு கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.கலக்கிய மாவை கப் கேக் மோல்டில் ஊற்றவும்.தேவை என்றால் சாக்லேட் சிப்ஸ் மேலே தூவலாம்.பின் அவனில் ( குக்கில்) வைத்து வேக வைக்கவும்.
5 (அவன்) நிமிடத்தில் தர்ப்பூசணி கப் கேக் ரெடி.பார்க்கவும்,ருசிக்கவும் மிகவும் நன்றாக இருக்கும் இந்த கேக். குக்கர் என்றால் 45 நிமிடங்கள் ஆகும்.