இங்கு மருத்துவம், பொறியியல் உட்பட ஏராளமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதை தவிர மிகப்பெரிய ஆஸ்பத்திரியும் இந்த வளாகத்துக்கு உள்ளேயே செயல்பட்டு வருகிறது.
இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். இதில் நிறைய பேர் வசதியான வீட்டு பிள்ளைகள்தான். இதனால் இவர்கள் தங்குவதற்காக ஹாஸ்டலும் எஸ்ஆர்எம்முக்கு உள்ளது.
எஸ்.ஆர்.எம்.பல்கலை., 10வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
அதற்கு மறுதினமே, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனித் செளத்திரி (19) என்ற மாணவர் விடுதியின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதனையடுத்து ஒரு மாதம் இடைவெளியில் கடந்த ஜீலை 15 ஆம் தேதியன்று கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தர்சன் (18) என்ற மாணவர் அதே பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மூன்று மரணங்களும் ஆரம்பத்தில் தற்கொலை என்று கருதப்பட்டாலும் பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
தற்கொலையின் தலைமையிடம் எஸ்.ஆர். எம்.? மேலும் ஒரு மாணவன் தற்கொலை!
அதனடிப்படையில், இந்த வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறைக்கு அதாவது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி கடந்த ஜூலை 17 ஆம் தேதி தமிழக காவல்துறை இயக்குனர் திருபாதி உத்தரவிட்டார்.
இறந்த மாணவர்களின் நண்பர்கள், மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், காவல் துறைக்கு தகவல் சொல்லப்பட்ட நேரம் சொன்னவர் யார், கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் மரணம் தொடர்பாக சக மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் விவரங்களை சேகரிப்பதுடன், அங்கு மூலைமுடுக்கு விடாமல் விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விரைவில் மாணவர்களின் மரணத்தில் உள்ள உண்மை வெளியில் வரும் என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.