சென்னை: டிவி தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை பிரியங்கா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. 32 வயதான பிரியங்கா, சென்னை வளசரவாக்கம் காமகோடி நகரில் கணவருடன் வசித்து வந்தார். அவருக்கு குழந்தைப் பேறு இல்லாததால் அடிக்கடி கணவர் வீட்டாருடன் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அறைக் கதவை உள்புறமாக தாழிட்டு நீண்ட நேரம் பிரியங்கா கதவைத் திறக்கவில்லை எனக் கூறி, அவரது கணவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, பிரியங்கா தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
அவர்கள் இருவருக்கும் இடையில் நேற்று இரவு ஏதேனும் தகராறு ஏற்பட்டதா? என போலீசார் அவரது கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிவி., சீரியல்களில் நடித்து வந்த பிரியங்காவின் தற்கொலை முடிவு, அவரது சகாக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





