― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சைவ சித்தாந்தப் பெருமையை சீர்குலைக்க கிறிஸ்துவ அமைப்புகள் சதி: அரசு தலையிட கோரிக்கை!

சைவ சித்தாந்தப் பெருமையை சீர்குலைக்க கிறிஸ்துவ அமைப்புகள் சதி: அரசு தலையிட கோரிக்கை!

avudaiyarkoil thiruperunthurai

சைவ சமய பெருமைகளை சீர்குலைக்க கிறிஸ்தவ அமைப்புகள் சதி செய்வதாகவும், அவற்றைத் தடுத்திட தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில், கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கூறிய போது,

” மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும் ” என்ற நூல் சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. சைவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையிலும், மாணிக்கவாசகரை கொச்சைப்படுத்தும் வகையிலும் இந்நூலின் ஆசிரியர் பத்மாவதி செயல்பட்டுள்ளார்.

சிவபெருமான் சோதி வடிவமாக அதாவது அருவமாக அருள்செய்யும் அற்புதத் தலம் திருப்பெருந்துறை. இத்தலத்தில் சிவலிங்கம் இல்லாது இருப்பதால் அது சிவ பெருமான் ஆலயம் இல்லை என்று முனைவர் பத்மாவதி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டும் இல்லாது மாணிக்கவாசகரே திருப்பெருந்துறையை சாஸ்தா கோயில் என்று திருவாசகத்தில் பாடியுள்ளார் என்றும், மாணிக்கவாசகர் சூழ்ச்சிக்காரர் என்றும், நரியைப் பரியாக்கிய வரலாறு பொய்க்கதை என்றும், மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனை ஆட்சியில் அமர்த்த சாணக்கியன் போன்று சூழ்ச்சி செய்வதற்காகவே தன் மனைவியுடன் மதுரையில் வந்து தங்கினார் என்றும் தவறான தகவல்களை கூறியுள்ளார்.

சிவ பெருமான் உருவங்களில் ஒன்றான சோதி வடிவத்தை உணராது சிவ லிங்கத் திருமேனி மட்டுமே சிவாலயத்துக்கு அடையாளம் என்றும், திருப்பெருந்துறை பெருமாள் கோயில் என்றும் சைவ சமயத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் மாணிக்க வாசகரை இழித்தும் பழித்தும் எழுதியிருக்கும் அந்த நூலை சைவ சித்தாந்த பெருமன்றத்தின் சார்பாக வெளியிட்டுள்ளனர்.

இந்த அமைப்பிற்கு பின்னணியில் கம்யூனிச, கிறிஸ்தவ இயக்கங்கள் இருப்பது தெளிவாகப் புரிகிறது. தொடர்ந்து இந்து மத சிறப்புகளை, வரலாற்று நிகழ்வுகளை, மத நம்பிக்கைகளை பற்றி தவறான தகவல்களை இந்த அமைப்புகள் பரப்பும் வேலையை செய்து வருகின்றன.

பத்மாவதி் நூலில் என்ன எழுதியுள்ளார் என்பது தெரியாமல் சைவ சித்தாந்த பெருமன்றம் இந்நூலை பதித்து வெளியிட்டிருப்பதாகக் கூறுமானால், அது மிகப் பெரிய தவறு. நூலை வெளியிட்ட பதிப்பாசிரியர், மற்றும் நூலாசிரியர் பத்மாவதி மற்றும் இந்த அவலத்திற்கும், அறியாமைக்கும் துணை நின்றவர்கள் அனைவரும், திருப்பெருந்துறை சிவபெருமானிடமும், மாணிக்க வாசகப் பெருமானிடமும் மன்னிப்புக் கேட்டு தங்களையும், தங்களின் வழி வழி வருகின்ற வாரிசுகளையும் சிவ நிந்தையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த நூலினை உடனடியாக தடைசெய்ய வேண்டும். இக்கோரிக்கையினை முன்னிறுத்தி மயிலை கபாலீஸ்வர் கோயில், கரூர் மற்றும் திருப்பெருந்துறையில் ஆர்ப்பாட்ட ‘உண்ணாவிரதப் போராட்டங்களில் சிவனடியார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நூல் தடை செய்யப்படும் வரை அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள், சிவன் அடியார்கள் கலந்து கொள்ளும் கூட்டு பிரார்த்தனை நடத்தப்படும். தமிழக அரசு சைவ சமய பெருமையை சீர்குலைக்க நடைபெறும் சதிகளை முறியடிப்பதோடு இந்த நூலையும் உடனடியாக தடை செய்ய இந்து மக்கள் கட்சி கோருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

1 COMMENT

  1. தமிழக அரசின் அறநிலைத்துறை உடனே நடவடிக்கை எடுத்து இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version