mathurai - 2026மதுரை மாநகரும்,மீனாட்சி அம்மன் கோவிலும் வரலாற்று சிறப்பு மிக்கவையாகும்.வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்து இன்னும் பலர் அரியாத அரிய தகவல்கள் புதைந்து கிடப்பதாக கூறியுள்ள நிலையில் தற்போது மீனாட்சி அம்மன் கோவில் அருகே பள்ளம் தோண்டியபோது பாதாளச்சிறை போன்ற ஒரு கட்டிடம் இருப்பது தெரிய வந்துள்ளது..pathala cirai e1563105284765 - 2026மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார்களை நிறுத்தும் பணிக்கான கட்டிட வேலை ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் அடித்தளத்திற்காக சுமார் 30 அடி அளவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பள்ளத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் கூடிய ஒரு பழமையான கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில்தான் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் பாதாளச்சிறைச்சாலை ஒன்று இருந்ததாகவும், அந்த சிறைச்சாலைதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கட்டிடம் என்றும் கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பழமையான கட்டிடம் பாதாளச்சிறை என உறுதி செய்யப்பட்டால் அதனை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என மதுரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மாநகரில் இன்னும் பல புதிர்கள் இருப்பதாகவும் அதனை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுமென்றும் வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending