நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை… : இலங்கை தமிழ் எம்.பி., கொடுத்த சான்றிதழ்!

Published:

Yogeswaran srilanka mp - 2026

நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை என்று இலங்கை எம்பி பேசியுள்ளார்.

நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்கள் என்று கூறிக்கொள்ள அருகதையற்றவர்கள் என்று இலங்கை எம்பி யோகேஸ்வரன் பேசியுள்ளார்.

தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் அவர் பேசிய போது, இந்தியா என்பது இந்து மக்கள் ராஜ்ஜியம். இதை யாரும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது. இலங்கையின் ஆன்மீகத்திற்கு அஸ்திவாரம் இட்டது தமிழகம்! ஏனென்றால் இலங்கை ஒரு சிவ பூமி. இலங்கையில் ஆன்மிகம் வளர்ந்திருப்பது போல தாய் மண்ணான தமிழகத்திலும் ஆன்மிகம் மேலோங்கி இருக்கிறது. ஆறுமுக நாவலர், திருமூலர் ஆகியோர் இலங்கையை சிவபூமி என்று அழைத்தனர்

கடந்த காலங்களில் மத, இன ரீதியாக ஒன்றுபட விநாயகர் சதுர்த்தி விழா உதவி இருக்கிறது. மக்கள் எல்லோரும் நாங்கள் இந்து என்ற உணர்வோடு வாழ முற்பட வேண்டும். ஓர் இந்து எல்லா மத மக்களிடத்திலும் பற்றுள்ளவராக இருந்தாலும் சொந்த மதத்திலும் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழா மதம், இனம் ரீதியாக ஒன்றுகூடும் நிகழ்வாக உள்ளது. இலங்கையில் இருக்கும் நாங்கள் இந்து மதத்தில் பற்றுடன் உள்ளோம்!

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இலங்கையில் இந்துக்கள் எப்போதும் இந்து சமயப் பற்றாளராக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல. அங்கு அரசியலை நிர்ணயிக்கக் கூடியவர்களாகவும் இருக் கிறார்கள். இந்து என்றால் சைவத் தின் உள்ளடக்கம்.

சைவம் என்றால் தமிழ்; தமிழர் என்றால் சைவர்கள்! தமிழகத்தில் நாத்திகம் பேசுபவர்கள் தமிழர் என்று தங்களைக் கூறிக் கொள்ள அருகதை அற்றவர்கள்! இவர்கள் நாத்திகம் பேசிக்கொண்டு நாங்கள் தமிழர்கள் என்று வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

சகோதர மதத்தைச் சேர்ந்தவர்கள் இனத்தையும், மதத்தையும் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் தங்கள் மதத்தைக் கொச்சைப் படுத்த மாட்டார்கள். ஆனால், இந்து மதத்தில் இதுபோன்ற நிலை உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இது அதிகமாக உள்ளது. இதில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் இந்து மதம் தழைத்தோங்க வேண்டும். ” என்று யோகேஸ்வரன் பேசினார்.

தமிழகத்தில் யார் தமிழர்கள் என்று தாங்கள் தான் சான்றிதழ் வழங்குவோம் என்று சில அமைப்புகளும் இயக்கங்களும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது, இலங்கை எம்.பியின் “தமிழர்கள் யார்” பேச்சு, அந்த அமைப்புகளின் முகத்தில் கரி பூசியுள்ளது!

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img