ரயில்வே அளித்த இன்ப அதிர்ச்சி! ரயில் கிளம்புவதற்கு 5 நிமிடம் முன்பு கூட ரிசர்வ் செய்யலாம்!

Published:

railbhavan
railbhavan

இன்று முதல் ரயில் கிளம்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு கூட பயண டிக்கெட்டை உறுதி செய்யும் வகையில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்து ஐஆர்சிடிசி பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு முதல் ஐந்து நிமிடத்துக்கு முன்பு வரை முன்பதிவு செய்யலாம் என்றும் அதன் பின்னர் இரண்டாவது ஒரு சார்ட் தயாரிக்கப்படும் என்றும் ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது!

ரயில் கிளம்பும் நேரத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 5 நிமிடங்களுக்கு முன்பு வரை ஆன்லைனில் அல்லது கவுண்டரில் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம்!

இதற்கு முன், ரயில் கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்னரே முன்பதிவு நிறுத்தப்பட்டு சார்ட் தயாரிக்கப்படும்! அதன் பிறகு,  இடம் இருந்தால் கவுண்டரில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்! அல்லது, டிக்கெட் பரிசோதகரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்.  ஆனால், தற்போது, ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கூட முன்பதிவு செய்யலாம் என்பதால், இந்த புதிய நடவடிக்கைக்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் 

பயணிகளுக்கு வசதி அளிக்கும் முயற்சியில், ஒரு ரயில், நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்கள் வரை இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய அனுமதித்துள்ளது.  கோவிட் தொற்று காரணமாக, பின்னடைவைச் சந்தித்துள்ள ரயில்வே துறையை மீட்டெடுக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன் காரணமாகவே, இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய விதி அக்.10ம் தேதி  இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!
sengottai railwaystn1 podhigai
sengottai railwaystn1 podhigai

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள்:
தெரிந்து கொள்ள 5 விஷயங்கள்

1. COVID-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக,, இந்திய ரயில்வே இரண்டாவது இட ஒதுக்கீடு சார்ட் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்துக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கிறது. இருப்பினும், இப்போது நிலையங்களிலிருந்து ரயில்கள் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது முன்பதிவு சார்ட் தயார் செய்யப்படும்.

2. இன்று முதல், திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்துக்கு 30 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை இரண்டாவது சார்ட்  தயாரிக்கப்படும். இந்த காலகட்டத்தில் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும்.

3. ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக முதல் சார்ட் தயாரிக்கப்படும். டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு இடங்கள் காலியாகிவிட்டால், இரண்டாவது சார்ட் தயாரிக்கப்படும் வரை பிஆர்எஸ் கவுண்டர்கள் மூலமாகவும் ஆன்லைனில் டிக்கெட்கள் முன்பதிவு செய்ய முடியும்.

4. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் விதிகளின் படி, இந்த நேரத்தில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்யலாம்.

 5. “ரயில் பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்காக மண்டல ரயில்வேயின் வேண்டுகோளின்படி, இது நடைமுறையில்ஆராயப்பட்டு, ரயில் புறப்படும் நேரத்திற்கு / திட்டமிடப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக இரண்டாவது சார்ட்  தயாரிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

அதன்படி, இரண்டாவது சார்ட் தயாரிப்பதற்கு முன், ஆன்லைன் மற்றும் பிஆர்எஸ் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு வசதி கிடைக்கும். அக்டோபர் 10 முதல் இந்த ஏற்பாட்டை செய்வதற்காக CRIS மென்பொருளில் தேவையான மாற்றங்களைச் செய்யும் “என்று இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img