தெலங்காணாவில் பதுக்கம்மா பண்டிகை! தமிழிசை வாழ்த்து!

Published:

padukkamma-festiv-1
padukkamma-festiv-1

இன்றிலிருந்து தெலங்காணா பதுக்கம்மா பண்டிகை. இந்த ஆண்டு வீட்டிலேயே இந்த பூக்களின் பண்டிகையை கொண்டாட சொல்லி அரசு அறிவிப்பு.

தெலங்காணா பண்பாட்டையும் சம்பிரதாயங்களையும் பிரதிபலிக்கும் பதுக்கம்மா பண்டிகை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. ஒன்பது நாட்கள் நவராத்திரியை ஒட்டி இந்த பண்டிகை நடைபெறும்.

நூறாண்டு வரலாறு கொண்ட இந்த பதுக்கம்மா உற்சவங்கள் 2014ல் தெலங்காணா மாநிலம் ஏற்பட்ட பிறகு அரசு பண்டிகையாக அறிவித்து நடத்தி வருகிறது.

padukkamma-festival-1
padukkamma-festival-1

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் மிகவும் பிடித்தமான இந்த பண்டிகையின் முதல் நாள் ‘எச்சில் பூ பதுக்கம்மா ‘ என்றும் இறுதி நாள் ‘பழைய சாதம் பதுக்கம்மா’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த முறை கொரோனா மற்றும் பெரு மழையின் காரணமாக பதுக்கம்மா பண்டிகை சற்று உற்சாகம் குறைந்து காணப்படுகிறது. வீட்டிலேயே பண்டிகையை கொண்டாடும் படி அரசு அறிவித்துள்ளது.

பதுக்கம்மா பண்டிகையை முன்னிட்டு பெண்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெலங்காணா ஜாக்ருதி தலைவர் எம்எல்சி கல்வகுண்ட்ல கவிதா குறிப்பிட்டார். பிரத்தியேக சூழ்நிலைகளில் இந்த பண்டிகையை கடைபிடிப்பதால் ஒவ்வொருவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி விட்டு ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

பண்டிகையை முன்னிட்டு ‘தெலங்காணா ஜாக்ருதி’ 3 வீடியோ பாடல்களையும் ஒன்பது பாடல்களோடு கூடிய சிடிக்களையும் வெளியிட்டது.

padukkamma-festival2-1
padukkamma-festival2-1

தெலங்காணா அரசங்கம் பண்டிகைக்கு முன்பாகவே ஒவ்வொரு வீட்டிற்கும் பதுக்கம்மா புடவைகளை பெண்களுக்காக அளித்தது. மாநில அரசாங்கம் பதுக்கம்மா காணிக்கையாக அளித்த புடவைகளை ஒரு கிராமத்தில் தோட்டத்திற்கு வேலியாக சிலர் கட்டினார்கள்.

ராஜன்னா சிர்சிலா மாவட்டம் தங்கள்ளபல்லி மண்டலத்திலுள்ள கன்டில்சபேட்ட கிராமத்தில் ஒருவர் தன் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்திற்கு ஆடு மாடுகள் மேயாமல் இருப்பதற்காக புடவைகளை வேலியாக கட்டியுள்ளார். ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டதற்கு சென்ற ஆண்டு கொடுத்த பதுக்கம்மா புடவைகளை இன்னும் கட்டாமல் அப்படியே இருக்கிறது என்று தெரிவித்தார்.

கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் விதமாக பெண்களுக்கு பண்டிகை காணிக்கையாக படவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு மாநில அரசாங்கம் கடைப்பிடிக்கும் பதக்கம்மா புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநில அளவில் தொடங்கியது. இந்த மாதம் நவராத்திரி யோடு தொடங்கும் பதுக்கம்மா பண்டிகையை முன்னிட்டு புடவைகள் விநியோகத்தை செய்துள்ளார்கள்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இந்த ஆண்டு ஒரு கோடி புடவைகள் விநியோகம் செய்யவேண்டும் என்ற இலக்கோடு அந்தந்த மாவட்டங்களுக்கு 98.5 லட்சம் புடவைகளை அனுப்பியுள்ளார்கள். மாவட்டங்களில் புடவை விநியோகம் தொடர்ந்து நடந்து வருகிறது.

பதுக்கம்மா பண்டிகைக்காக தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img