― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeலைஃப் ஸ்டைல்முக்கியமான மெயிலை பாதுகாக்க..!

முக்கியமான மெயிலை பாதுகாக்க..!

gmail

அலுவல் ரீதியான விஷயங்களை பகிர்ந்து கொள்ள இமெயில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இமெயிலை பயன்படுத்தி பல தகவல்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும்.

மேலும் இது வேகமான மற்றும் மிகவும் வசதியான தகவல் தொடர்பு சேனலாகும். இமெயிலை பலர் பயன்படுத்தி வருவதன் காரணமாக, இன்பாக்ஸ்கள் பெரும்பாலும் ஆயிரக்கணக்கான இமெயில்களால் நிரம்பி வழியும்.

இந்த இமெயில்களில் பல தேவையற்ற இமெயிலும் இருப்பதுண்டு. அவை ஸ்பேம் இமெயில் என்று குறிப்பிடுவதால் ஸ்பேம் பகுதிக்கு சென்று விடும். அதே போல சில இமெயில்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்க கூடும்.

சில நேரங்களில், இது போன்ற முக்கியமான இமெயில்கள் விளம்பரம் சார்ந்த இமெயில்களாலும் அல்லது தேவையற்ற இமெயில்களாலும் மறைக்கப்படுகின்றன. இது உங்கள் இன்பாக்ஸை மிகவும் குழப்பமாகவும் ஒழுங்கற்றதாகவும் மாற்றி விடுகிறது. இருப்பினும், இவற்றை சீர்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன.

இன்பாக்சில் உள்ள ஒரு குறிப்பிட்ட இமெயிலை முன்னிலைப்படுத்த ‘ஸ்டார்’ என்கிற வசதியை பயன்படுத்தலாம். இது மிகவும் எளிமையான முறையாகும்.

ஸ்டார் செய்தல்

இமெயிலை ஸ்டார் செய்ய முதலில் உங்கள் மொபைல், டேப்லெட் அல்லது லேப்டாப்பில் உங்கள் ஜிமெயில் கணக்கைத் திறந்து கொள்ளவும். பிறகு நீங்கள் ஸ்டார் செய்ய விரும்பும் இமெயிலை திறக்கவும்.

இதில் நட்சத்திர வடிவ குறியீடு இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய இமெயிலை நட்சத்திரமிடப்பட்டதா அல்லது ஹைலைட் செய்யப்பட்டதா என்பதைக் குறிக்கும் வகையில் மஞ்சள் நிறமாக மாறும்.

இது போன்று எத்தனை இமெயிலை வேண்டுமானாலும் நட்சத்திரமிடலாம். ஸ்டார் செய்த இமெயில்கள் அனைத்தையும் ‘Starred’ என்கிற ஃபோல்டரில் காணலாம்.

மேலும் இமெயிலில் உள்ள ஸ்டாரை நீக்க, இமெயிலுக்கு அடுத்துள்ள மஞ்சள் நட்சத்திரத்தில் மீண்டும் கிளிக் செய்தால் போதும். அது ‘Starred’ ஃபோல்டரில் இருந்து அகற்றப்படும்.

மற்ற வழிகள்

இது போன்ற அம்சங்களைக் கண்டறிய, உங்கள் ஜிமெயில் பக்கத்தில் உள்ள செட்டிங்ஸிற்கு செல்லவும். பின்னர் ‘See all settings’ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது ‘General’ என்பதை தேர்ந்தெடுத்து, அதில் ‘Stars’ என்கிற ஆப்ஷனை தேடவும்.

வழக்கமான மஞ்சள் நட்சத்திரத்தைத் தவிர வேறு பல நட்சத்திர நிறங்களும் மற்றும் ஐகான்களும் ஜிமெயிலில் வழங்குகிறார்கள். வேறு எந்த நிற நட்சத்திரம் அல்லது ஐகானைத் தேர்வு செய்ய, அதை ‘Not in use’ ஆப்ஷனில் இருந்து ‘In use’ என்கிற ஆப்ஷனுக்கு மாற்றவும்.

இறுதியாக கீழே உள்ள ‘Save Changes’ என்பதை கிளிக் செய்து விடவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version