runout - 2026உலகமெங்கும் கிரிக்கெடிற்கு ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.ரசிகர்கள் என்றால் சாதாரணமான ரசிகர்கள் கிடையாது. வீட்டை விட்டு, வேலையை விட்டு கிரிக்கெட் கிரிக்கெட் என உயிரை விடும் ரசிகர்கள்.

இப்படி ஒரு ரசிகர் கொல்கத்தாவில் தன் உயிரையே விட்டுயிருக்கிறார். நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.heart attack - 2026இந்த நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் மைட்டி என்பவர் இந்தியா-நியூசிலாந்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டியை செல்போனில் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது டோனி ரன் அவுட் ஆனபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள கடைக்காரர்கள் அவரை  மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியா தோல்வி அடைந்த சோகத்தோடு,இந்நிகழுவும், அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending