― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மாதம் ரூ. 189 தவணைத் தொகையில் புதிய ஸ்மார்ட் டி.வி.;  அதிரடி ஆப்ஃர்!

மாதம் ரூ. 189 தவணைத் தொகையில் புதிய ஸ்மார்ட் டி.வி.;  அதிரடி ஆப்ஃர்!

sumart TV

இந்தியாவில் ரூ. 6,799 விலையில் புதிய ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

நோபில் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

நோபில் ஸ்கியோடோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஹெச்.டி. ரெடி ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

24 இன்ச் அளவில் கிடைக்கும் நோபில் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி. விலை ரூ. 6,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டி.வி.யில் 1366×768 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இதில் ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் வழங்கப்பட்டுள்ள இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் 20 வாட் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு செயலிகள், சேவைகள் மற்றும் பில்ட்-இன் கேம்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

ப்ளிப்கார்ட் தளத்தில் டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 189 விலையில் 36 மாதங்களுக்கு மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

இதுதவிர பயனர்கள் தங்களின் பழைய டி.வி.யை கொடுத்து அதிகபட்சம் ரூ.3000 வரை தள்ளுபடி பெற முடியும்.

நோபில் ஸ்கியோடோ டி.வி.

இத்துடன் அறிமுகமான NB32R01 32-இன்ச் 1366×768 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.

இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகித உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

32 இன்ச் மாடலில் பில்ட்-இன் கேம்கள், ஒரு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் நோபில் ஸ்கியோடோ நிறுவனம் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி.யை ரூ. 10,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இத்துடன் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஸ்மார்ட் டி.வி. ரூ. 16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இவை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version