எனது முதல் சபரிமலை பயணம்  

 

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும் ஐயப்ப சுவாமிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். முதல் நாளிலே மாலை அணிந்து, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, கறுப்பு நிற உடையில் அவர்கள் நடமாடுவதே ஒரு தெய்வீக அழகுதான்.

எனக்கும் சபரிமலைக்குமான பந்தம் மிக சிறு வயதில் இருந்தே தொடங்கி விட்டது. அப்போதெல்லாம் சபரிமலைக்கு போவோர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம். 
 
அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் சபரிமலைக்குப் போக வேண்டும் என்ற ஆவல் தூங்க விடாமல் செய்யும்.
ஆனாலும் கடுமையான விரத முறைகள் பயத்தைக் கொடுக்கும். ஒருவேளை நாம் சரியாக விரத முறைகளை கடைப்பிடிக்காமல், ஐயப்பன் தண்டித்து விட்டால்… இந்த பயமே என்னை சபரிமலைக்குப் போக விடாமல் தடுத்தது.
வெகுகாலம் கழித்து, அதாவது 20 வருடங்களுக்கு முன்பு தான் மாலையணியாமலும் சபரிமலைக்கு போகலாம் என்பது தெரிய வந்தது. 
 
அது போதாதா…! அந்த வருடமே புறப்பட்டு விட்டேன். அதுவொரு பரவச அனுபவம்.
சிறுவயதிலிருந்தே கேட்டுப்பழகிய “”பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை. சுவாமியே ஐயப்பா, ஐயப்பா சுவாமியே….!” 
என்ற பாடல் என் மனதில் தொடர்ந்து ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது.

1.bp.blogspot.com Jyl3r5WmRyU VJwOaxYl8bI AAAAAAAACqU 5Xp0Lip Hq8 s1600 sab009 - 2026

 சபரிமலைக்கு எந்த பஸ்ஸில் ஏறுவது எங்கு போய் இறங்குவது என்ற எந்த விவரமும் தெரியாது. கடிதமும் ஒரு சில வீடுகளில் உள்ள டெலிபோன்கள் மட்டுமே தகவல் தொடர்பு சாதனமாக இருந்த காலம் அது. அதனால் யாரிடமும் விவரம் கேட்க முடியவில்லை. ஏற்கனவே சபரிமலைக்கு சென்று வந்தவர்களிடம் கேட்கலாம் என்றால், மாலையணியாமல் விரதம் இல்லாமல் அங்கெல்லாம் போகக்கூடாது என்று ஏதாவது ஒரு சுவாமி தடுத்து விடுவாரோ! என்ற பயத்தில் அவர்களிடமும் கேட்கவில்லை.

வெளியாட்களிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டது இரண்டு வி­ஷயங்கள் மட்டும்தான். மதுரையிலிருந்து சபரிமலைக்கு செங்கோட்டை, புனலூர் வழியாக ஒரு பாதையும், கம்பம், குமுளி வழியாக இன்னொரு பாதையும் இருக்கிறது, என்பது மட்டும்தான்.

 

 
 குமுளி வழியாக போவது தான் பக்கம். ஆனால் அப்போதெல்லாம் குமுளியிலிருந்து பம்பைக்கு நேரடி பஸ் கிடையாது. மாறி மாறித்தான் போக வேண்டும் என்றார்கள். இல்லையென்றால் ஜீப் போகும் என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொன்னார்கள். 
 
என்ன ஆனாலும் சரி. ஐயப்பனை இந்த முறை தரிசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் குமுளி போகும் பஸஸில் என்னை ஏறிக் கொள்ள செய்தது. 
 
பஸ்ஸில் நிறைய ஐயப்ப சுவாமிகள் இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் கூனிக் குறுகிப் போனேன்.
நான் ஒருவன் மட்டும்தான் மாலை அணியாமல் போவது என்னவோ போல் இருந்தது. என்னை தண்டிக்க ஐயப்பன் கோபத்தோடு காத்திருப்பது போல திரும்பத் திரும்ப தோன்றியது.
பஸ்ஸின் கடைசி வரிசையில் ஒரு சுவாமி தனது ஐந்து வயது மகனுடன் உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“”சுவாமி! சபரிமலைக்கு எப்படி போகணும்? ”
முதன் முதலாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாலை அணிந்திருக்கும் சுவாமிகளிடமே கேட்டு விட்டேன்.
“”குமுளில இருந்து வண்டிப் பெரியார் வழியாப் போகறதுதான் பக்கம். ஆனா பஸ் இருக்காது. அதனால முண்டகாயம் வழியாவோ, எரட்டுபெட்டா வழியாவோ தான் போகணும்” என்று மூன்று பாதைகளைச் சொன்னார். 
 
எனது பயம் இன்னும் அதிகமாகி விட்டது. மொழி தெரியாத ஊரில் நடு காட்டுக்குள் மாட்டிக் கொள்ளப் போகிறோம். மாலையணியாமல் வந்த நமக்கு நல்ல தண்டனையைக் கொடுக்கப் போகிறார் ஐயப்பன். 
 
மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. தவிப்புடனே குமுளி வந்து இறங்கினேன். நேரம் இரவு 12 மணியைக் கடந்திருந்தது. குளிர் என்றால் அப்படியொரு பேய்க் குளிர்! 
 
தமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் நுழைந்தால்… வரிசையாக நேந்திரம் பழ சிப்ஸ் சுடச்சுட போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஐயப்ப சுவாமிகள் அங்கு நின்று கொண்டு சூடாக டீ, காபி, சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 
 
அங்கு மட்டும்தான் வெளிச்சம் இருந்தது. பஸ் நிலையம் உட்பட மற்ற எல்லா இடங்களிலும் இருள் அப்பியிருந்தது. ஒரேயொரு பஸ் மட்டும் அது பஸ் நிலையம் என்பதற்கான அடையாளத்தை உணர்த்தி நின்று கொண்டிருந்தது.
 
 அது முண்டகாயம் போகும் பஸ். பம்பைக்கு காலை 7 மணிக்கு தான் அடுத்த பஸ் இருக்கிறதாம். கிடைப்பதில் ஏறிப் பயணத்தைத் தொடர்வது என்று ஏறி அமர்ந்து கொண்டேன். எல்லோரும் போர்த்திக் கொண்டு கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தார்கள்.
குளிருக்கு வேண்டிய உடைகள் எடுத்து வராததால் எனது உடல் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பற்கள் தானாக தந்தியடித்தன.
ஒரு மணி நேரம் கழித்து பஸ் புறப்பட்டது. முண்டகாயம் வந்து சேர்ந்த போது பொழுது புலர்ந்திருந்தது. அங்கும் குளிர்தான் என்னை விடாமல் விரட்டிக் கொண்டிருந்தது. 
 
சூடாக எத்தனை டீ, காபி குடித்தாலும் அந்தக் குளிர் என்னை விட்டு விலகுவதாக இல்லை.
அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து பம்பை வந்து சேர்ந்து விட்டேன். காலை 9 மணி ஆகியிருந்தது. இதமான வெயில் குளிருக்கு சுகமாக இருந்தது. பம்பையில் நீராடுவது மிகப் புனிதம் நிறைந்தது. 
 
நானும் குளிரைப் பொருட்படுத்தாமல் “”சாமியே! சரணம்!” என்று நதியில் மூழ்கி எழுந்தேன். குளிர் பறந்தோடியது.
 
பூமியில் ஐயப்பன் அவதரித்தது இந்த பம்பை நதிக் கரையில்தான். அந்த நதியில் குளிப்பதும் அதில் கன்னி சுவாமிகள் வாழை மட்டையில் தெப்பங்கள் செய்து விளக்கேற்றி ஆற்றோடு விடுவதும் மெதுவாக ஓடும் நீரில் அலுங்காமல் குலுங்காமல் அந்த தெப்ப தீபங்கள் மிதந்து செல்வதும் அழகோ அழகு.

1.bp.blogspot.com lcA8YvHAjmw VJwN3CaaBgI AAAAAAAACp0 UKUFZIPLAc s1600 3943786483 89bde3ce18 b - 2026

4.bp.blogspot.com dW19 52IS7k VJwOJtFY3iI AAAAAAAACqE 7AsKjzSxrSo s1600 Aaratu%2B %2B01 1 - 2026

பம்பா நதியில் குளித்த பின் மலை மீது ஏறத் தொடங்கினேன். முதலில் நீலிமலை ஏற்றம் வருகிறது. செங்குத்தாக இருக்கும் இந்த ஏற்றத்தில் ஏறுவதற்குள் மூச்சு வாங்குகிறது. அங்கு நிலவும் குளிரையும் மீறி வியர்த்தது. அதன் உச்சி அப்பாச்சி மேடு.

அதிலிருந்து சற்று தூரம் சென்றால் சமநிலமாக வருகிறது சபரி பீடம். இங்குதான் ராமனை காண்பதற்காக பெண் பக்தை சபரி அமர்ந்த நிலையில் தவம் செய்தாராம். இவரின் பெயரில்தான் இந்த மலையை சபரிமலை என்று அழைக்கிறார்கள். 
சபரி பீடத்திற்கு அருகிலேயே சரங்குத்தி ஆல் உள்ளது. இங்கு கன்னி சுவாமிகள் தங்களுக்கு துணையாக வந்த சரத்தை (அம்பு)  இங்கு விடுவிக்க வேண்டும். (சரம் என்பது எருமேலியில் முதல் முறையாக வரும் கன்னி சுவாமிகளுக்கு கொடுக்கப்படுவது) பல கன்னி சுவாமிகள் தங்கள் குருசாமியர் உதவியால் இதை செய்து கொண்டிருந்தார்கள்.

2.bp.blogspot.com d 66ey1Vvk VJwNspt0aUI AAAAAAAACps z2Iv Bgi440 s1600 02tvpt pilgrims1 880900g - 2026

சரங்குத்தி ஆல் முடிந்தவுடனே ஐயப்ப சுவாமிகளிடம் ஒரு புத்துணர்வு பெற்றது போல் நடை வேகமெடுக்கிறது. தங்களின் தலை மேல் உள்ள இருமுடியை இறுக்க பிடித்தபடி வேகமாக ஓடுகிறார்கள். இந்த வேகத்திற்கு என்ன காரணம் என்பது மெதுவாகத்தான் எனக்கு புரிந்தது. 
 
சன்னிதானம் அருகில் வந்து விட்டது. என்பதற்கான அடையாளம் இது! மாலை அணிந்த சுவாமிகள் எல்லாம் வரிசைப்படி தான் படியேற வேண்டும். நானும் அவர்கள் வரிசையில் நின்றேன்.
“”ஐயப்பா! மாலை போடாதவங்க இங்க நிக்க வேண்டாம். இது 18ம் படி வழியா போறவங்க நிக்கிற வரிசை. நீங்க அப்படியே சைடுல போனீங்கனா சன்னிதானத்துக்கு போயிடலாம்!” என்று ஒரு சுவாமி சொல்ல அப்படியே செய்தேன். வரிசை மிக நீண்டு இருந்தது. நான் மேல வந்து விட்டேன்.

4.bp.blogspot.com zicc4vWP2mc VJwNogLQ2KI AAAAAAAACpc CTsseHxDgvc s1600 16p aazhi2 - 2026

1.bp.blogspot.com iaOzpnuRF1o VJwNrNpFF8I AAAAAAAACpk 6y7T VNfJNk s1600 16tvpt padipuja jpg 631748e - 2026

 
தங்க கூரையில் ஐயப்பனின் சன்னிதானம் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது. வரிசை மெதுவாக நகர நகர ஐயப்பனை நெருங்கிக் கொண்டே வந்தேன். எல்லையில்லா பரவசம் மனம் முழுவதும் படர்ந்திருந்தது. அமர்ந்த நிலையில் அமைந்திருக்கும் ஐயப்பனின் அந்த உருவம் சட்டென மனதில் ஒட்டிக் கொண்டது.
 
‘தண்டிப்பாரோ!’ என்று பயத்துடன் வந்த என்னை சாந்தமாக ஐயப்பன் பார்த்துக் கொண்டிருந்தார். ‘நான் இருக்கிறேன். கவலைப்படாதே!’ என்று ஆறுதல் சொல்வது போல் ஐயப்பனின் அழகு இருந்தது. 
 
தரிசனம் முடித்து பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பின்பு சன்னிதானத்திற்கு இடது புறம் இருக்கும் மாளிகைபுர தேவியை வணங்கினேன்.

1.bp.blogspot.com hDBHemmCyVw VJwN6mCdg I AAAAAAAACp8 sTsMmc2ln3A s1600 800px SabarimalaTemple2 - 2026

 
எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அதுவரை அடங்கியிருந்த அகோர பசி  வயிற்றுக்குள் எழுந்தென்னைத் தாக்கியது. அருகிலேயே அன்னதானம் செய்தார்கள். திருப்தியாக சாப்பிட்டேன். 
 
இரவு சரியான தூக்கம் இல்லாததும் நடந்த களைப்பும், உண்ட மயக்கமும் ஒன்றாக கலந்து அசத்த அங்கேயே படுத்து தூங்கினேன். எல்லா சுவாமிகளும் அப்படித்தான் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
தூங்கி எழுந்ததும் மீண்டும் ஐயப்பனை தரிசித்தேன். பார்க்க பார்க்க திகட்டாத அழகாக ஐயப்பனின் உருவம் இருந்தது. நடை சாத்தும் வரை அங்கேயே இருந்தேன். 
 
நடை சாத்துவதற்கு முன்பு ‘ஹரிவராசனம்’  பாடல் இசைக்கத் தொடங்கியது. 32 வரிகள் கொண்ட இந்தப் பாடலை ஐயப்பனுக்கான தாலாட்டுப் பாடலாக கருதுகிறார்கள். 
 
புகழ்பெற்ற பாடகர்கள் பலர் இந்தப் பாடலைப் பாடியிருந்த போதும் ஜேசுதாஸ் பாடிய பாடலே இங்கு ஒளிபரப்பப்படுகிறது.
அமைதியான இரவில் மலையின் குளுமையில் பாந்தமான குரலில் ஒலித்த இந்தப் பாடல்  நம் மனதை என்னவோ செய்கிறது. மலையில் இருந்து கீழே இறங்கினேன். 
 
வெகுதூரம் வரை ‘ஹரிவராசனம்’ கேட்டுக் கொண்டே இருந்தது. இதற்குப் பின் பலமுறை சபரிமலைக்கு வந்து போய்விட்டேன். இருமுடி கட்டி 18 படிகளிலும் ஏறி விட்டேன். ஆனாலும் நான் முதன் முதலில் சபரி மலைக்கு வந்த அனுபவத்தை  மறக்கவே முடியாது.
 
இப்போது பெரிய பாதை வழியாக பயணித்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அதை ஐயப்பன் என்று நிறைவேற்றப் போகிறாரோ..?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories