குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கருப்புச் சட்டையுடன் ஸ்டாலின்!?

stalin in black shirt - 2026

கர்நாடக மாநில முதல்வராக புதன்கிழமை பதவி ஏற்கிறார் மஜத., தலைவர் குமாரசாமி. அதற்கு முன்னதாக, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுப் போனார் குமாரசாமி.

காவிரி பாயும் மைசூர் மாண்டியா பகுதியில் புகழ் பெற்றது ஸ்ரீரங்கப்பட்டணம். காவிரி ஆறு அங்கே சிறிய ஆறாக, ஆனால் நீர் வளம் மிகுந்து பாய்கிறது. அதன் பின்னர் கேஆர் எஸ் எனப்படும் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டப்பட்டு, காவிரி நீர் தேக்கி வைக்கப் படுகிறது.

காவிரிப் பிரச்னை மாண்டியா பகுதியில் மட்டுமே எதிரொலிக்கும் ஒரு பிரச்னையாகத் திகழ்கிறது. அதனாலேயே காவிரி விவகாரத்தில் மிகக் கடுமையான காழ்ப்பு உணர்வுடன் தமிழர்கள் குறித்த மோசமான சொல்லாடல்களை உதிர்த்தார் குமாரசாமி. அதற்கு ஏற்ப, கர்நாடகத்தில் வடக்கு, மேற்குக் கடற்கரைப் பகுதி, மத்திய கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் பலம் வாய்ந்த வேட்பாளர்களை முன்னிறுத்தி வெற்றி பெற்றது பாஜக. ஆனால், மாண்டியா பகுதியில் காவிரியும் கன்னடமும் என பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்த குமாரசாமியால், காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி முன்னரே டம்மி வேட்பாளர்களை நிறுத்தியது பாஜக. எதிர்பார்த்தது போலவே முடிவுகள் அமைந்தாலும், பாஜக., எதிர்பார்க்காத திடீர் திருப்பத்தை குமாரசாமி ஏற்படுத்தி விட்டார்.

தேர்தலுக்கு முன்னர் வரை காங்கிரஸை காறித் துப்பி வந்த குமாரசாமி, தேர்தலுக்குப் பின்னர் வேறு வழி இல்லாததால், பதவி ஆசையில் காங்கிரஸ் கொடுத்த வாய்ப்பை மண்டியிட்டு ஏற்றுக் கொண்டார். அதுவரை, காங்கிரஸுக்கும் குமாரசாமிக்கும் முட்டுக் கொடுத்து வந்த திமுக., தேர்தல் நேரத்தில் பாஜக.,வை எதிர்த்தே தமிழகத்தில் அரசியல் செய்ததே தவிர, குமாரசாமியை கண்டித்தோ, காங்கிரஸை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை சொல்லியோ அரசியல் செய்யவில்லை.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

தமிழகம் வந்த மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினர் திமுக.,வினர். ஸ்டாலின் இதற்காக தனிப்பட்ட வகையில் களம் இறங்கி, காங்கிரஸுக்கு ஆதரவாக அரசியலைச் செய்து வந்தார். பாஜக.,வினர் பினாமி என்று ஆளும் அதிமுக., அரசை குற்றம் சாட்டிய ஸ்டாலின், காவிரியில் தொடங்கி, ஈழத் தமிழர் படுகொலை, தமிழர் விரோத கொள்கைகளுடன் திகழ்ந்த காங்கிரஸின் அடிவருடியாக தாம் செயல்படும் செயல் தலை என மற்றவர் விமர்சிப்பதை ஒருபோதும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

அதை உறுதிப் படுத்தும் விதத்தில், எடியூரப்பா வெற்றி பெற்று முதல்வர் ஆகும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், காவிரி நீரைத் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால், எடியூரப்பா ராஜினாமா செய்து, குமாரசாமி முதல்வர் ஆகும் நிலையில், அவருக்கு வெறுமனே வாழ்த்து தெரிவித்து, மதசார்பற்ற கட்சிகளுக்கு இது உத்வேகம் அளிப்பதாகக் கூறி காவிரியை மறந்து ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு தேவேகவுட அழைப்பு அனுப்பியதை அடுத்து, ஸ்டாலின் அதில் கலந்து கொள்ளவுள்ளார். தமிழகத்துக்கும் தமிழருக்கும் இத்தனை துரோகங்கள் செய்து, தமிழரை கேவலப்படுத்திய குமாரசாமிக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பதவி ஏற்பு விழாவில் ஸ்ஆலின் கருப்புச் சட்டையுடன் பங்கேற்பாரா என்று தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

அதில் ஒரு கருத்து…

குமாரசாமி தான் ஒரு ஆண்பிள்ளைன்னு நிரூபிச்சுட்டான். தமிழகத்துக்குள்ளேயே வந்து… காவிரி நீர் தரமுடியாதுன்னு தெனாவட்டா கொக்கறிச்சுட்டுப் போயிட்டான்.

ஸ்டாலின் உண்மையான ஆண் பிள்ளையா இருந்தா குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்போது கருப்புச்சட்டை அணிந்து கொண்டு காவிரி நீர் தமிழகத்துக்கு தந்தே ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டும். இல்லை யென்றால் சுங்கிடி சேலையை கட்டிக் கொள்ள வேண்டும்.

கர்நாடக திமுக, விசிக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் அட்லீஸ்ட் கறுப்பு பலூனாவது பறக்க விடுவார்களா?

2 COMMENTS

  1. இவன் அரசியல் விபச்சாரி. ஆகவே நிர்வாணமாக கூட போக ரெடி. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்க மற்றும் கருப்பு உடுப்பு அணியமாட்டான். வேண்டுமானால் கருப்பு ஜட்டி அணிந்து இருந்ததாக பின்னர் தமிழர்களிடம் கூறுவான்.

  2. இவர்கள் கருப்பு சட்டை நாடகம் குமாரசாமியுடன் ஒப்பந்தம் போட்டு காவேரி விவகாரத்தை திசை திருப்பும் நோக்கமே,
    காங்கிரஸ் ஆட்சியில் செய்த தவறுகளை மறைக்கவும், சித்தராமையாவை காப்பாற்றவும் காங்கிரஸ் 78ஐ 38ல் அடமானம் வைத்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories