டிப்ஸ்.. டிப்ஸ்… மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Published:

raining 1 - 2026

தற்போது மழைகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.!

மழைக் காலம் என்பதால், கடும் மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே

? நீர் மோட்டார் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்

? மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்

? செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்; கூடுமானவரை டேடாவை ஆஃப் செய்து வையுங்கள்! தேவைப்படும் போது ஆன் செய்து கொள்ளுங்கள்!

? ஒரு வீட்டில் 4 பேர் இருந்தால் ஒருவர் செல்போனை மட்டும் ஆன் பண்ணி வைக்கவும், மற்றவர்களின் போனை சுட்ச்ஆப் செய்து வைக்கவும்

? முதல் போன் சார்ஜ் முடிந்த போது இரண்டாம் போனை ஆன் செய்து உபயோக படுத்தவும்

? பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்

? இன்வெர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வெர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்

? பிஸ்கட் ? பால் ? அவசர மாத்திரைகள் ? தண்ணீர் கேன் ? பேட்டரி செல்கள் (கை டார்ச்) ? மெழுகுவர்த்தி ? காய்கறிகள் ? மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

? குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்

? குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சி பயன்படுத்துங்கள்

? கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும் ? வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது

? இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள் ? மின்சாசன பொருட்களை கவனமாக கையாளவும்

? பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள் ? மரங்களுக்கு கீழே நிற்காதீர்கள், வாகனங்களை நிறுத்தாதீர்கள் ? மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும் ? ஆடு மற்றும் மாடுகளை மின் கம்பங்களில் காட்டாதீர்கள்

? மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை ? உங்கள் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்!

Related articles

Recent articles

spot_img