health tips - 2026

அப்பாச்சி தீர்வு: யானைக்கால், பைத்தியம், வாய்நாற்றம், குஷ்டரோகம், உடம்பு ஊதல்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

யானைக்கால் வியாதிக்கு…

பப்பாளிப் பழத்தை சாறெடுத்து வெயிலில் காய வைத்து கெட்டியான பிறகு சிறு சிறு மாத்திரைகளாக செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வரலாம். பப்பாளி இலையை அரைத்து காலுக்கு பற்றும் போடலாம். இதனால் நாளடைவில் நல்ல பலன் ஏற்படும்.

உடம்பு ஊதல் சரியாக…

கல்யாண முருங்கைச் சாறு ஆழாக்கு எடுத்து வடிகட்டி 350 கிராம் சீனாக் கற்கண்டு சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி பதமாக இறக்கி வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை ஓர் அவுன்ஸ் வீதம் எடுத்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் ஊதல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் இதைச் சாப்பிடுதல் கூடாது.

வாய் நாற்றம் சரியாக…

மணத்தக்காளி கீரை ஒரு பிடி, எடுத்து வெந்தயம் 35 கிராம். வெங்காயம் 100 கிராம், ஏலரிசி 1 கிராம் ஆகியவற்றை சிவக்க வறுத்து இரண்டாழாக்கு நீர் விட்டுப் பாதியாக சுண்டக் காய்ச்சி ஒரு நாளைக்கு மூன்று வேளை மூன்று நாள்கள் ஓர் அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர வாய் நாற்றம் சரியாகும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

பைத்தியம் தெளிய

கரு ஊமத்தை இலைகளை நன்கு உலர்த்தி தூள் செய்து சம எடை சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு காலை, மாலை பாலில் சாப்பிட்டு வர நீண்ட நாள் பைத்திய ரோகங்களும் குணமாகும்.

குஷ்ட ரோகம் குணமாக…

பெருந்துத்தி என்னும் துத்திச் செடியின் வேரை இடித்துக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டு வர குஷ்ட ரோகம் பரவாமல் தடுப்பதுடன் சிறந்த பலனும் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.