health tips - 2026

அப்பாச்சி தீர்வு: அரையாப்புக்கட்டி, இந்திரியம் கெட்டிபட, தோல்வியாதி, பசியின்மை, குதிகால் வாதம், இரத்த வாந்தி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

அரையாப்புக் கட்டி சரியாக…

கரு ஊமத்தை இலைகளைப் பறித்து சாறெடுத்து கோழிமுட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்துக் குழைத்து கட்டியின் மீது பூச வேண்டும். மேலும் இரண்டு நாள்களுக்கும் (கழுவாமல்) அதன் மேலேயே பூசி வர வேண்டும். மூன்றாம் நாள் அதைக் கழுவி சுத்தம் செய்து அதே மாதிரி மீண்டும் பற்றுப் போட கட்டி பழுத்து உடையும்.

குதிகால் வாதத்துக்கு…

ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குதிகால் வாதம் குறைந்து குணமாகும்.

இரத்த வாந்திக்கு…

மாங்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து உவர்த்தி தூள் செய்து அரை ஸ்பூன் தூளுடன் தேன் சேர்த்துக் குழைத்து காலை. மாலை சாப்பிட்டு வர இரத்த வாந்தி குணமாகும்.

நன்னாரி மருத்துவம்

நன்னாரி வேரை பச்சையாகக் கொண்டு வந்து இடித்துச் சாறெடுத்து ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பின்னும் சிறிதளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர தோல் வியாதிகள், நீண்டகால கீழ்வாத நோய்கள், அஜீரண நோய், பசியின்மை எல்லாம் சரியாகும்.

இந்திரியம் கெட்டிப்பட…

ஒரு தோலா முள் இலவம் பிசினை அரை லிட்டர் நீரில் ஊற வைத்து தினமும் காலை வேளையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வர இந்திரியம் கெட்டிப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.