அப்பாச்சித் தீர்வு: சூதகக்கோளாறு, சிரங்கு, இரத்தசோகை, தலைவலி, தொண்டையடைப்பான்..!

Published:

health tips - 2026

சூதகக் கோளாறு குணமாக…

கீழாநெல்லி இலையை ஒரு பிடி எடுத்து ஏழு மிளகு சேர்த்து நன்கு அரைத்து வீட்டுக்கு விலக்காகிய நாள் முதல் மூன்று நாள்கள் காலையில் மட்டும் சாப்பிட்டு வர சூதகக் கோளாறு. சூதக வயிற்று வலி குணமாகும்.

சிரங்கு சரியாக…

நாயுருவி இலையை மைபோல் அரைத்து இரவில் சிரங்கின் மீது தடவி காலையில் கழுவி விட்டு சுத்தமான தேங்காயெண்ணெயை சற்று சூடு செய்து பூசி வர சிரங்கு சரியாகும்.

இரத்த சோகைக்கு…

கரிசலாங்கண்ணி இலைகளை வாயில் போட்டு மென்று தின்று வர இரத்த ஓட்டம் நன்கு ஏற்பட்டு இரத்த சோகை நீங்கும்.

. தலைவலிக்கு…

அகத்தி இலையையும் அகத்திப் பூவையும் சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து நாசியின் மூலம் இரு துளிகள் உறிஞ்சினால் தலைவலி நின்று விடும்.

தொண்டையடைப்பான் குணமாக…

தொண்டை சவ்வுகளில் வீக்கம் கண்டதுமே நல்ல சுவையான மாம்பழங்களைத் தோலுடன் மென்று சாப்பிட தொண்டை யடைப்பான் நோய் குணமாகும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img